வெற்றித் திருநகர்
49
ழ்வில் ஒடுங்கிற்று. அதில் ஈடுபட்டவர்களில் அரசரும் இருந்தனர். ஆண்டியும் இடம் பெற்றனர். ஆனால் அது அரசியல் சாரா இயக்கம், புரோகிதரும் சாரா இயக்கம்! அந்த அளவில் அது தேசீயம் வளர்க்கும் இயக்கமாயிருந்ததே தவிர, தேசீயத்தை உருவாக்கும் தேசீய இயக்கமாய் அமையவில்லை. நேர்மாறாக,14- ஆம் நூற்றாண்டுத் தேசீய இயக்கம் தென்னகத் தேசீயத்தை உருவாக்கியது மட்டுமன்று-சிந்து கங்கை வெளித் தேசீயத்துக்கும் அதுவே தேசீயக் கருமுதல் ஆகும்.
அரசியல் புரட்சி
முகமது துக்ளக் பட்டத்துக்கு வந்த ஓராண்டுக்குள் துணைக் கண்ட முழுவதிலும் அவன் படைகள் பரவியிருந்தன. ஆனால் இந்தப் பரப்பு சூறையாட்டுப் பரப்பாகச் சின்னாட்கள் நிலவினவே தவிர, ஆட்சியாக நிலைக்கவில்லை. மக்கள் உள்ளத்தில் எங்கும் சிலகாலம் அச்சமும் கிலியும் திகிலும் பரவியிருந்தன. மக்கள் தலைமை வகிக்கத்தக்க பேரரசராக ஒய்சளர் தவிர வேறு யாரும் மீந்திராததே இதற்குரிய காரணமாகும். ஆனால் விரைவில் இந்நிலைமை மாறி மக்கள் உள்ளத்தில் புதிய தெம்பு ஏற்படத் தொடங்கிற்று. இதற்கு முதன்முதலில் மூலகாரணமாயிருந்தவன் பேரரசன் மூன்றாம் பல்லாளனே என்பதில் ஐயமில்லை. தென்னகத்தின் கிழச்சிங்கம் தன் சிங்க மரபு பொய்ப்பிக்காமல் 1342-ஆம் ஆண்டுவரை ஓயாது போராடி விடுதலை மலரின் இதழ்களை ஒவ்வொன்றாகத் தென்கோடியில் முகிழ்வித்தே வந்தது.
ய
தெற்கே தமிழகம் அடைந்த மாறுதல் தென்னகத்தின் வட திசையிலும் புதிய சூழல் வளர்த்தது. அங்கே பேரரசர் இல்லாத நிலையிலும், பேரரசின் மரபில் வந்த அரசர், சிற்றரசர், படைத் தலைவர் ஆகியோர் மக்கள் ஆதரவுடன் ஒருங்கிணைந்து வந்தனர்.
'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே - நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே!'
என்ற எண்ணம் மக்களையும் ஆட்சியாளர்களையும் இந்நெருக்கடி நாட்களில் உள்நின்று ஊக்கிற்று.