50
வாரங்கல்
அப்பாத்துரையம் – 13
அரசியல் முறையில் இத்தேசீய எழுச்சியின் பிறப்பிடம் அல்லது தெலுங்கானாப் பகுதியேயாகும். தேவகிரியைப் போல அது முற்றிலும் கீழடக்கப்பட்டுவிடவில்லை. வட திசை ஆட்சியை உதறித் தள்ளிவிட அப்பகுதி மக்கள் என்றும் துடித்துக் கொண்டேயிருந்தனர். வீர காம்பிலி தேவனின் தியாகப் போராட்டம் அவர்கள் உள்ளத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. முகமது காம்பிலி தேவன் உடலுக்கும், பகாவுதீன் உடலுக்கும் இறந்த பின்னும் இழைத்த பழிகேடுகள் வடதிசைப் புயலின் இயல்புபற்றி அவர்களிடையே வெறுப்பும், சீற்றமும் பெருக்கியிருந்தன. இந்நிலையில் காபயநாயகன் என்ற தலைவன் அவர்களிடையே ஆட்சிக் கெதிராகக் கிளர்ந்தெழுந்த பொழுது, வழக்கத்துக்கு மாறான தேசீய ஆதரவு அவனுக்குக் கிட்டிற்று. அவன் படைவீரர் மட்டுமின்றிப் பொதுமக்களே பேரார்வத்துடன் போர் முயற்சியின் பின்னணியிலிருந்து வீரரை ஊக்கினர். இந்நிலையில் படைவீரர் படைவீரராக மட்டும் செயலாற்றவில்லை, மக்கட் போர் வீரராகக் கிளர்ந்தெழுந்தனர்.
நோய்களில் தொற்று நோய்களும், கொள்ளை நோய்களும் உண்டு. ஆனால் நற்பண்புகளிலும் இது போன்ற தொற்றுப் பண்புகளும் காட்டுத்தீ, கானாறு போன்ற உக்கிரப் பண்புகளும் உண்டு. தேசீய எழுச்சி இத்தகையது. அது நாட்டையும், நாட்டு மக்களையும் மட்டுமின்றி, சூழ்புல மக்களையும் சூழ்புலச் சிற்றரசர், தலைவர்களையும், வல்லரசர்களையும் எளிதில் ஆட்கொண்டது.பக்கத்திலுள்ள கொண்ட வீட்டில் புதிய ரெட்டி அரசு நிறுவிய முதல்வன் புரோலயவேமன் காபநாயகனின் நெருங்கிய உறவினன். அவன் காபயநாயகனுடன் இணைந்து தோளொடு தோள்நின்று பொருதான். கோருகொண்டா ஆண்டரெட்டிமன்னன் மும்முடி நாயகன் காபநாயகனின் தங்கை மகளை மணஞ்செய்திருந்தான். அவனுக்கும் அருகிலிருந்த இராசகொண் டாவின் வேளம மரபினரும், பித்தாபுரம் நாயக மரபினரும் எளிதில் ஒருங்கு திரண்டனர்.
இத்தகைய மக்கட் பேரெழுச்சி வாரங்கலை விடுவித்ததுடன் நின்றுவிட முடியாது. மக்கள் தம் முதல் வெற்றி கடந்து எதிரிமீது சீறிக் கொண்டிருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் காபயநாயகனும் கிளர்ச்சியின் மற்றத் தலைவர்களும்