வெற்றித் திருநகர்
53
இங்கே மாறுபடுகிறது. ஆனால் பெரிஷ்டா தரும் பெயரும் பட்டப் பெயராகத் தரப்படுகிறது. முடிபு எப்படியும் பெரிஷ்டாவின் வாசகமாகவே அமைந்துள்ளது.
'வாரங்கலாண்ட மாலிக் மக்பூல் அல்லது இமத் உல்முல்க் என்பவன் தில்லிக்கே ஓடவேண்டியவனானான். காம்பிலி தில்லியின் கையிலிருந்து நழுவிற்று, அது 'இந்து'க்கள் வசமாய் விட்டது. தேவகிரியும் குஜராத்தும் மட்டுமே தில்லியின் பிடியில் மீந்தன'.
பேரரசு நிறுவனம்
தென்னகத்தின் விடுதலை புதிய தேசீய இயக்கத்தின் முன்னீடான முதற்பகுதி, விசயநகரப் பேரரசு நிறுவனம் அதனைத் தொடர்ந்த நடுப்பகுதி இரண்டையும் அடிப்படையாகக்கொண்டு வித்தியாரண்ணியர் தலைமையில் ஒழுங்குபடுத்தப்பட்ட வைதிய இயக்கம் அதன் இறுதிப்பகுதி. இம் மூன்றும் ஒன்றுடன் ஒன்று ணைபிரியாது ஒன்றியவை என்பதில் வரலாற்றாசிரியர் களிடையே கருத்து வேறுபாடு கிடையாது. ஆனால் அந்தத் தொடர்பின் தன்மைகள் பற்றிய ஆதாரங்கள் பலதிறப்பட்ட வேறுபாடுகளை உடையன. அவற்றின் மீது வரலாற்றாசிரியர் எழுப்பியுள்ள விளக்கக் கோட்பாடுகளும் பன்முகப்படுபவை யாகவே அமைகின்றன.
-
விசயநகரப் பேரரசையும் விசயநகரத்தையும் ஒருங்கே நிறுவியவர்கள் சங்கமன் என்பவன் புதல்வர்களான ஐவர் அரிகரன், புக்கன், கம்பணன், மாரப்பன், முத்தப்பன் என்ற உடன்பிறந்தார்களே. வித்தியாரணியர் உதவியுடனும் உதவியுரைகளுடனும் ஒத்துழைப்புடனும் நகரம் நிறுவப்பட்டது. கல்வெட்டு ஆதாரங்கள் சிறப்பாகச் சில சமயம் அரிகரனையும், சில சமயம் புக்கனையும், சில சமயம் வித்தியாரணியரையும் அதன் நிறுவுதல் முதல்வர்களாகக் குறிக்கின்றன.
மூவருமே நிறுவுதலில் நேரடி முறையில் பங்குடையவர்கள் என்று கொள்ள இடமுண்டு. கோயிலும், சமயவாழ்வும், மக்கள் ஆதரவும் புதிய நகர நிறுவனத்திலும், பேரரசமைப்பிலும் முக்கிய டம் பெறுவது இயல்பு. அந்நாளைய சமய உலகில் வித்தியாரணியர் படிநிலை பெரிது. அவரும் அவர் உடன்
ய