வெற்றித் திருநகர்
'ஒன்றதுபேரூர் வழி ஆறு அதற்குள
என்றதுபோல இருமுச்சமயமும்’
63
என்று தமிழகத்தின் பண்டை மாமுனியாகிய திருமூலர் 5-ம் நூற்றாண்டிலேயே ஒரு தேசிய அரசியல் திட்டத்தையும், அதன்வழி ஒரு சமயக் கூட்டமைப்புத் திட்டத்தையும் வகுத்துக் காட்டியுள்ளார். வித்தியாரணியர் விசயநகரம் அல்லது சிருங்கேரியை அத்தகைய மையப் பேரூராக்கி அதனின்றும் வைதிக இயக்கத்தைப் பேரரசத் தலைவர்களின் ஒத்துழைப்புடன் நானிலமெங்கும் கால்வாங்கிப் பரப்புவித்தார். அவ்வியக்கத்தின் அடிப்படைக் கருத்துக்களுள் சில வாய்வழி மரபாகப் பழமொழிகள் போல இன்றும் தென்னகத்திலும் சூழ்புலங் களிலும் உலவுகின்றன.
'பல சமயங்களும் ஒரு கடவுட் பெயரைப் பலவாகக் கூறலாம். ஆனால் கடவுள் ஒருவரே. எப்பெயரில் அழைத்தாலும் வரவேண்டியவர் அவரே' என்பது வைதிக இயக்கத்தின் அடிப்படைக் குறிக்கோள். முக்கிய போட்டிச் சமயங்களான சைவ, வைணவங்கள் மீது வைத்து, நாட்டுப்புறப் பாணியில்
அரியுஞ் சிவனும் ஒண்ணு - இதை அறியாதவன் வாயில் மண்ணு.
என்ற பேச்சுப் பிரசாரம் எழுந்தது. இதன் வழிநின்று வட திசையில் கபீரும் நானக்கும் அணிமையில் காந்தியடிகளும் 'ராம் -ரஹீம்' ஒற்றுமை பாடினர்.
அரிகரன் புதல்வனான ஐயனார் வழிபாடு இக்கருத்துடன் புதுப்பிக்கப்பட்டிருத்தல் வேண்டுமென்னலாம். பேரரசின் முதல் அரசன் பெயரும், பிற அரசர் பெயரும் அரிகரன் என்றே அமைந்துள்ளது என்பது இதனைச் சுட்டிக் காட்டுகிறது.
தென்னகத்திலும் சூழ்புலங்களிலும் பண்டிருந்தே பல மக்கள் தெய்வங்கள் சிறு தெய்வங்களாக வணங்கப்பட்டன. இவற்றுக்கு மக்களே- மக்களிடையே மக்களாக விளங்கிய மக்கட் ரோகிதரே வழிபாடாற்றினர். வழிபாடு அவரவர் தாய் மொழிகளிலேயே இருந்தது. இன்று கூட இதன் தொடர் மரபைத் தென்னகமெங்கும் காணலாம். புத்தர் சமணர் காலங்களில்