66
அப்பாத்துரையம் – 13
வை
பெயர்களால் நிலவும் மூவின வேறுபாடு தோன்றிப் பரந்தவகை இதுவே. பல எழுத்தாளர்கள், வரலாற்றாசிரியர்கள் விசயநகர காலத்திலிருந்து பிறந்தவை என்று அறியமாட்டாமல், இவற்றை மிக முற்பட்ட கால மரபுகளாகக் கருதி விடுகின்றனர். மேலை நாட்டினரைக் கூட இந்த மயக்கம் விட்டபாடில்லை.
பெரும் பிரிவுகளாகிய இந்த இனப் பிரிவுகளுடன் வைதிக இயக்கம் சமுதாயத்தை விட்டு விடவில்லை. நடுத்தர வகுப்பிலும் இயல்பாகவே செல்வ உயர்குடியினர் வைதிக இயக்கத்தின் ஆதரவால் மேலும் உயர்வு பெற்றனர். இயக்கத்தைப் பயன்படுத்திப் புத்துயர்வு பெற்று வந்தவர்களுடன் அவர்கள் இவ்வுயர்வைப் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. நடுத்தர வகுப்புக்குள்ளாகவே அசைக்க முடியாத உரிமைகளையுடைய ஒரு நடு இடை வகுப்பும், அவர்களுக்குப் போராடும் வலங்கை வகுப்பு, இடக்கை வகுப்பு ஆகிய இருபக்கக் கை வகுப்புகளும் எழுந்தன. இருகைகளின் கைகலப்புக்கள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலம்வரை கலகங்களும் குழப்பங்களும் உயர்முறை மன்ற வழக்குகளும் உண்டுபண்ணியிருந்தன.
நடுத்தர வகுப்புப் பற்பல அறை கண்ணறைகள் போலச் சாதி கிளைச்சாதி உட்சாதிகளாக வகுத்தமைக்கப்பட்டதும் இக்காலத்திலேதான். ஒவ்வொரு தொழில் செய்தவர்களும் முதலில் தொழிற் கட்டுப்பாட்டுக்காகவும் சமய வினைகளுக் காகவும், நாளடைவில் மகமை அதாவது சமயத்துறை நிலைவரி களுக்காகவும் தனித்தனி கூட்டுற வமைப்புக்களாக வகுத்தமைக்கப் பெற்றனர். இப்புதிய ஒற்றுமை சமுதாய அடிப்படையில் தற்கட்டுப்பாட்டுடன் செய்யப்பட்டதனால், சமயத்துடன் சமயமாகச் சேர்ந்தது. ஒவ்வொரு சமய இயக்கத்தின் போதும், மாறுபாட்டின் போதும், அரசியல் மாறுபாட்டின் போதும் இச்சாதி உட்சாதி கிளைச்சாதி வகுப்புக்கள் எல்லையற்றுப் பல்கிப் பெருகி வந்தன - இன்னும் வருகின்றன.
ா
வடதிசை இஸ்லாமிய அலை போன்ற பண்படா அலைகளினின்று தேசீய வாழ்வைப் பாதுகாக்கவே வைதிக இயக்க நாட்களில் சாதி ஒற்றுமை பேணி வளர்க்கப்பட்டது. ஆனால் இதுவே சமுதாயத்தில் நிலையான வேற்றுமைகளையும்