68
வீரசைவம் சீவைணவம், இஸ்லாம்
அப்பாத்துரையம் – 13
தேசீய இயக்கத்தின் சமுதாய, சமயக் கிளையாகவே வைதிக இயக்கம் வளம் பெற்றாலும், அரசியல் சார்பு அதில் முற்றிலும் இல்லாமலில்லை. அவ்வியக்கத்தின் தலைவரான வித்தியாரணிய அடிகளின் அகல் விரிவான பண்பிணக்க நயமும் சமய சமரசமுமே இதற்குச் சான்றுகள் ஆகும். அவர் இஸ்லாம் சமயத்தை எதிர்க்கக் கனவு கண்டது கிடையாது. இஸ்லாத்தின் பெயரால் வந்த வட திசைப் புயலாட்சியை எதிர்த்து, அதிலிருந்து இஸ்லாம் உட்பட்ட எல்லாச் சமயத்தினருக்கும் முழு நிறை சமய வாழ்வுரிமைக்குரிய விடுதலை பெறவே அவர் முனைந்தார். ஆனால் வித்தியாரணிய அடிகளின் பண்பிணக்க நயத்துக்குரிய மிகச் சீரிய சான்று அவர் இஸ்லாத்திடமோ, புத்த சமண சமயங்களிடமோ காட்டிய ஒப்புரவன்று. ஏனெனில் சுமார்த்த நெறியினர் அல்லது புரோகித இனத்தவர் இஸ்லாத்தின் வளர்ச்சியைவிடச் சைவம், வீரசைவம்,சீவைணவம் ஆகியவற்றின் முனைத்த வளர்ச்சி கண்டே கலங்கி வந்தனர். ஒரே 'இந்து' சமயத்தினுள் இவ்வெல்லா இயக்கங்களுக்கும் இடங் கண்டதே வித்தியாரணியரின் பண்பிணக்கத் திறமைக்கும் அமைப்பாற் றலுக்கும் சிறந்த ஒரு சான்று ஆகும்.
ஏ
முதன் முதலில் தென்னகத்திலும் கீழ்திசையிலும் புத்த சமண சமயங்களை அழித்து ஒழிப்பதற்காகவே புரோகித இனத்தவர் மக்கட் சமயங்களுக்குத் தம் ஆதரவும் அரசியல் ஆதரவும் நல்கி ஊக்கியிருந்தனர். ஆனால் புத்த சமண சமயங்கள் ஒடுக்கப்பட்டாலும் அவற்றின் அடிப்படை மனிதப் பண்புகள் இம்மக்கட் சமயங்களில் விடாது வளர்ந்தே வந்தன. ஏனெனில் இவையே அடிப்படைத் தமிழ்ப் பண்பு, திராவிடப் பண்புக் கூறுகள், தமிழில் சித்தர் பாடல்களும், மலையாளத்தில் குஞ்சன் நம்பியார் மக்கட் பாட்டுக்களும், தெலுங்கில் வேமனர், கன்னடத்தில் சருவஞ்ஞர், மராத்தியில் ஞானேசுவரர் ஆகியோரது பாடல்களும் இம்மரபின் வலிமையையும், இனப் பரப்பு முழுமையும் அளாவிய அகல் விரிவையும் சுட்டிக் காட்டுகின்றன.
தென்னக வாழ்வின் இத்தேசீயச் சமயச் சூழல்களிடையே ஸ்லாம் பங்கு கொள்ளாமலில்லை. ஆனால் அதை ஒரே