70
அப்பாத்துரையம் – 13
இஸ்லாம் இவ்வாறு சமயமென்ற முறையில் தென்னக, கீழ்திசை மக்கட் சமயங்களுக்கு வலுவூட்டிற்றென்றாலும், வட திசை இஸ்லாமிய அலையின் உருவில் அது எதிர்பாரா வகையில் வைதிக நெறியாளருக்கே ஆதரவாய் அமைந்தது. அரசியல் வாழ்வு மட்டுமன்றிச் சமய, சமுதாய, குடும்ப வாழ்வுகளையும் குலைத்த அந்தப் புயலால் மக்கள் அடைந்த அவல நிலையில் தற்காலிக ஆதரவு தந்த எந்தத் துரும்பையும் புணையாகக் கைப்பற்றச் சித்தமாயிருந்தனர். கி.பி. 1328-ன் பின் வாரங்கலிலிருந்து கிளர்ந்தெழுந்த அரசியல் எழுச்சியின் விளைவாக மக்கள் தேசீய எதிர்ப்பார்வத்தை வித்தியாரணியர் சரிவர உணர்ந்து அவ்வுணர்ச்சி மீதே தம் முழு அறிவாற்றலும் அமைப்பாற்றலும் பயன்படுத்தி உலகம் இதற்கு முன்னோ, பின்னோ வேறெங்கும் என்றும் கண்டிராத பெருந்தேசீய சமுதாய அமைப்பை எழுப்ப முனைந்தார். அதன் உணர்ச்சிப் பேராற்றலின் முன் வைணவர் சைவர் பேரளவிலும், வீரசைவர் ஓரளவிலும் தேசீயத்தின் உள்ளார்ந்த சுமார்த்த எதிர்ப்பை முனை மழுங்கவிட்டனர்.
தென்னகத்திலும் துணைக் கண்டத்திலும் நாம் இன்று வரை இஸ்லாமிய சமுதாயத்துக்குள்ளேயே இந்த இரு இஸ்லாமிய மரபுகளைக் காணலாம். மனித இனத்திலேயே எத்தகைய வேறுபாடும் காட்டாது மண்ணுலகை ஒரு குடும்பமாகக் கருதும் இஸ்லாத்தின் எல்லைக்குள்ளிருந்து கொண்டே வடதிசை இஸ்லாமிய அலையின் சமுதாய நிழல் மக்களிடையே மொழி வேறுபாடும், இன வேறுபாடும் காட்டி வருகிறது. வடதிசையில் ஏனை மக்களில் பெரும்பாலானவர் போலவே இஸ்லாமியரும் இதற்கு இரையாகி வருகின்றனர். ஆனால் தென்னகத்தில் இஸ்லாமியரும் சரி, ஏனைமக்களும் சரி பண்பு வேறுபாடன்றி வேறுபிறப்பு வேறுபாடோ இன வேறுபாடோ கொண்டு முரணவில்லை. வடதிசை இஸ்லாமிய அலையும் ஏனை வடதிசையலையும் இப்பண்பில் அடிக்கடி உலைவு உண்டு பண்ணிவரினும், தென்னகத் தேசீயம் இவற்றை வென்று போலெழுந்தே வளர்ந்து வருகிறது என்னல் தகும்.
இஸ்லாத்தின் தாக்குதலில் மூன்றாவது கூறுமற்ற இரு கூறு களையும்விட முனைப்பாகத் தென்னகத் தேசீயத்தின்