பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 83

-

-


ர்

குறிஞ்சி முல்லை மரபு ஊழிகளில் ஏற்பட்ட இம் மாறுபாடுகளின் பயனாகவே, பெண்ணுருவாயிருந்த இறைவி ஆண்உருவ இறைவனானதுடன், பெண்டிரிடமே தங்கியிருந்த தெய்வ வழிபாடு (கணியன் பூசனையாளன், வானூலார்; பெண்பால் கணிகை; தேவராட்டி, தேவடியாள்; தாசி கடவுள் அடியார் ஆகிய இன்றைய இசைவேளாளப் பெண்டிர் பெயர்கள். அடிகள் - துறவி) ஆண்களுக்கு மாறிற்று. அல்லி மரபினரான பண்டைய அரசியர், பின்னாட்களில் ஆண் அரசர் ஆயினர். அத்துடன் தற்காலிகமாகத் தொடக்க காலத்தில் கோ மரபும், கிட்டத்தட்ட நிலையாக ஆய் மரபும் மூலமரபினின்று பிரிந்து சமயத் துறையில் தனிமரபான திருமால் வழிபாடும் (அன்னை வழிபாடும் கன்னி வழிபாடும்) சமுதாயத் துறையில் திணைசார்ந்த தனிமரபாக, கிட்டத்தட்டத் தனிச்சாதிமராக (ஆயர் அல்லது இடையரும்) பிரிய நேர்ந்தது. திணை தோறும் தெய்வங்கள் மாறினும், இத் திணை (ஓரளவு குறிஞ்சித் திணையும்) மட்டுமே கோ மரபின் இறைமைப் பிளவு காரணமாக சமய சமுதாய வாழ்வில் தனி மரபுகளாக ஒதுங்கியுள்ளது காணலாம். இது மேலும் (அச் சமுதாய, சமயத்துறை அறிஞரால்) ஆராய்தற்குரியது.

வேள்மரபின் வேர்முதற் பண்பு குறிக்கும் கோ, கோயில், அம்பலம், பொதியில் ஆகிய சொல் மரபு, பொருள் மரபுகளிலும் மேற்குறித்த மலர்ச்சிப் போக்கின் சாயல்களை நாம் காண்கிறோம். முருக, திருமால் வழிபாடுகளில் கோ என்ற சொல் கோ மரத்தை (கோயில் திருமரம், கொடி மரம்) மட்டுமன்றி மாடுகளைக் கட்டும் கட்டுத்தறியாகிய கம்பத்தையும் (கந்து, கந்தில்; கந்திற்பாவை) சுட்டிற்று. இதுவே இலிங்க வழிபாடாகவும் (கந்து, கந்தம் - இலிங்கம்; கந்தன் - முருகன்) மலர்ந்தது என்பதைச் சங்கப் பாடல்கள் சுட்டுகின்றன. இதற்கேற்பப் பொதியில் (வெட்டவெளி) சோலையாகவும் (பொதும்பர் - சோலை), முருகனின் குன்று தோறாடலாகவும் மலர்ந்தது. (இது பெரிதும் கொங்குநாட்டு மரபு ஆகலாம்) அத்துடன் திருமால் வழிபாட்டில் கோ அல்லது இறைவன் பசுமலை, பசுஞ்சோலை அல்லது நீலவான் ஆகியவற்றின் வண்ணத்தவனாக விண்டு (விண் நீலவான்; சமக்கிருத வடிவம்: விஷ்ணு) எனவும் கோயில் விண்ணகரம் (விண்டு - திருமால்; நகரம் - நகரும் இல்லங்கள்