பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 91

பின்னரும் சரி - எந்தப் புற அரசுகளும் பேரரசுகளும் கொங்கு நாட்டில் புற அரசு பேரரசுகளாக ஒரு சில நாட்கள் கூட நீடிக்கவில்லை. மற்றும் அவை அக அரசு பேரரசுகளாக ஆண்டபோதும் ஏனைய மண்டலங்களின் அக அரசு பேரரசுகளைப் போல நாட்டின் பழமையான தனித்தன்மை களையோ, குடியரசுப் பண்பையோ மாற்றித் தன் வயப்படுத்தி விடத் துணியவில்லை. ஏனெனில், அவை யாவுமே எத்தனை நூற்றாண்டுகள் தொடர்ந்த போதிலும் வரலாற்று நோக்கில் குறு கிய இடைக்கால நிகழ்ச்சிகளாக அல்லது தற்காலிக அரசியல் அலைகளாக மட்டுமே நிலவின. திணைநிலை ஆராய்ச்சியாளர் ஆய்ந்துணர்ந்து கூறும் முறையில் தமிழக, இந்தியப் பரப்பிலேயே வேறு எந்தத் திணைநிலை பரப்பையும் (Regional units) விடத் தற்காலக் கொங்கு நாடு, அறிஞர் மட்டுமே அறிந்த வெறும் வரலாற்று மரபெல்லையாக அமையாமல் மக்கள் வாழ்விலேயே நின்று நிலவவல்ல தனித்தன்மையும் தனிப்பண்பு பண்பாட்டெல்லையும் உடையதாய் இயல்வதன் காரணம் இதுவே.

கொங்கு என்பது ஒரு நாட்டின் ஒரு மரபெல்லையின் பெயராக மட்டும் நிலவவில்லை; அது தமிழ் மரபுப்பரப்பில் பூத்த ஒரு தனித்தமிழ் மரபின் பெயராக, தனிப்பண்பு பண்பாட்டின் பெயராக இன்றும் நிலவி வந்திருப்பதும் வருவதும் இதனாலேயே யாகும். மற்றும் அது உலகிலிருந்தும் இந்தியாவிலிருந்து, தமிழகத்திலிருந்து வேறுபட்டு நிற்கும் தனிப்பண்பு மட்டுமன்று; அதுவே அப்பரப்புகளின் பழம்பண்பு ஆகும். இதுமட்டுமன்று. அது அவற்றின் பழமைப் பண்பு மட்டுமாய் அமையாமல், அவற்றின் வருங்காலத் தேசிய மலர்ச்சிகளுக்கு இன்றியமையாத உயிர்மரபுப் பண்பாகவே நிலவுகிறது.

கொங்கு நாட்டில் ஓரளவு நீடித்த ஆட்சியமைத்த சேரர், கங்கர், சோழர், பாண்டியர் ஆகியோர்கூட தாம் ஆண்ட கால முழுவதிலும் கொங்குச் சேரர், கொங்குச் சோழர், கொங்குப் பாண்டியர் என்ற நிலையிலேயே ஆண்டிருந்தனர். புறமண்டலங் களை யாண்ட சேரசோழ பாண்டிய மரபினருடன் அவர்கள் தொடக்கக்கால குருதித் தொடர்பு அல்லது குடித்தொடர்பு அன்றி வேறு எத்தகைய தொடர்பும் கொள்ளா மல், தனிக்கொங்கு