பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 95

அவர்கள் கருதியுள்ளனர். சாதி வருண முறையின் தடம் எதுவும் இல்லாமலே இதே பண்புத்திறம் பழஞ் சீனமக்கள் சமுதாயத்திலும் நிலவி வந்துள்ளது என்பதையும், இந்தியாவிலும் கொங்குநாடு, தமிழகம், பழங் கொங்குத் தமிழகம் ஆகிய மையங்களிலிருந்து கால இடத் தொலைவில் விலகுந்தோறும் இப்பண்பு குறைந்து வந்துள்ளது என்பதையும் அவ் வரலாற்றாசிரியர் நுனித்துக் காணவில்லை.

இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் (1939-1945), பண்டைச் சமுதாயக் குடியரசுகளின் மக்கட் படையினை நினைவூட்டவல்ல ஊர்க் காவல் படையும், பிற புதிய மக்களாட்சி மரபுகளும், சமதரும் மரபுகளும் (பங்கீடு முதலியன) வகுத்தே இந்தியாவிலும் பிறநாடுகளிலும் மேலாட்சியாளர் மக்கள் வாழ்வமைதி காக்க முற்பட்டிருந்தனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது ஆகும்.

உண்மையில், தென்னக கொங்குப் பரப்பு மையத்திலிருந்து தென்னகமெங்கும், இந்தியாவெங்கும், தென்கிழக்காசியா வெங்கும் வைதிக இயக்கம் என்ற பெயரால் ஒரு புதிய தேசிய இயக்கத்தைத் திட்டமிட்டு உருவாக்கியவர், கி.பி. 14ஆம் நூற்றாண்டில் பண்டைக் கொங்குத் தமிழகப் பரப்பில் விசயநகரப் பேரரசை நிறுவிய வித்தியாரணிய அடிகளேயாவர். இந்தியாவின் நான்கு சங்கர மடங்களில் ஒன்றாக அப்பரப்பில் நிலவிய ஒரு மடத்தின் தலைவராயிருந்த அவர், இதற்குரிய படிப்பினைகளையும் நெறிமுறைகளையும் கொங்கு நாட்டு மக்கட் குடியாட்சிப் பண்பிலிருந்தே பெற்றிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், அப்பெரியார் தாம் ஒரு சமய மடம், வகுப்பு மடத்தின் தலைவராயிருந்தும்கூட, அகல் தேசிய நோக்குடன் எல்லா வகுப்பு மரபுத் தலைவர்களையும் மட்டுமன்றி, புத்தர், சமணர், சைவர், வீரசைவர், வைணவர், கிறித்தவர், இசுலாமியர் உட்பட எல்லாச் சமயத் தலைவர் களையும் தோழமையுடன் அழைத்து ஒருங்கு கூட்டி, அவர்கள் ஒத்துழைப்புடனேயே தம் தேசிய, சமுதாயத் திட்டத்தைத் தம் அரசியல் செல்வாக்காலும் அறிவுத்திறத்தாலும் பண்பாட்டுப் பெருமிதத்தாலும் கட்டமைத்துப் பரப்பினார்.

ன்

வித்தியாரணிய அடிகளாரின் சாதி சமய ஒத்திசைவுத் திட்டம், கொங்கு நாட்டு வாழ்வில் மட்டுமே வழிவழி மரபாகப்