பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
98 ||

அப்பாத்துரையம் - 14



வலிமையும் உடைய புதிய உலக சமயங்களின் முன்னே உலகின் மாண்டு மறைந்த பிற தொல் பழங்காலச் சமயங்களைப் போலச் சரிவுற்று விடாமல் இந்து சமயமும் இந்திய சமுதாயமும் புதிய சமயம், புதிய நாகரிகங்கள், புதிய சீர்திருத்த இயக்கங்கள் ஆகிய எல்லாவற்றுக்கும் ஈடுகொடுத்து நிற்கும் உறுதிப்பாட்டின் மறைதிறவும் இதுவே! ஆயினும், இவ்வுறுதிப்பாடு பயிர்நல உறுதிப்பாடாக அமையாமல், களையாக வளரும் முட்காட்டின் உறுதிப் பாடாகவே நிலவி வந்துள்ளது, வருகிறது. ஏனெனில், அடிகளார் நெறி, கொங்குவாழ்வின் உயிர் மரபும் உயிர் மலர்ச்சி, மரபும் அற்ற, உயிர்ப் பண்பின் உள்ளீடற்ற மரச்சட்டமாகவே உறைந்துவிட்டது. இதற்குரிய காரணங்கள் இரண்டு. முதலாவதாக, அவர் வகுத்த திட்டம் அவர் வகுத்த நாட்களில் சாதி சமயம் சாராத முழு தேசியத் திட்டமாகவே அமைந்திருந்தாலும், அதை அமைத்த அப் பெரியார் ஒரு சாதிமட, சமயமடத் தலைவராகவே அமைந்த காரணத்தினால், இன்று அது சாதி சமய சமுதாய அரசியல் குழு நலங்களின் ஆதிக்க அமைப்பாக மாறி இந்திய சமுதாயத்தில், இந்திய சமயத்தில் மாறாத, உயிர் மலர்ச்சியற்ற, மாற்றவோ திருத்தவோ முடியாத அடிப்படையாக ஆக்கப் பெற்று வருகிறது. அத்துடன், கொங்கு வாழ்வில் இயல்பாக அமைந்த குடியரசு மரபின் உயிர்த்துடிப்பை மட்டுமின்றி, அதனை வளர்க்கும் திறமுடைய குடியரசு மரபில் வந்த தலைமையையும் அது முற்றிலும் இழந்துவிட்டது.சமுதாயத் தலைமைக்கு மாறாக, அது சமுதாயத்தைச் சுரண்டி வாழ முற்படும் ஒரு பிற்போக்கான குழு நலத்திற்குரிய குருட்டுத் தலைமையாய் விட்டது. தேசியவாதிகள், சமய சமுதாயச் சீர்திருத்தவாதிகள் ஆகியோரின் தேசிய ஒருமைப்பாட்டுக்கும், அவ்வகைக்குரிய நன்முயற்சிகளுக்கும் அது நிலையான தடங்கலாய், தேசிய வாழ்வுக்கே ஒரு மாபெருந் தடையாய், அமைந்துள்ளதன் காரணம் இதுவே.

ரு

அடிகளாரின் திட்டம் இழந்துவிட்ட இந்த பண்புகளையும், சங்ககாலக் குடியரசு மரபில் வந்து அதன் உயிர் மலர்ச்சியும் உயிர் மரபுத் தலைமையும் முற்றிலும் இழவாது நிலவும் கொங்கு வாழ்வு, இன்னும் பேரளவில் பெற்றுத் திகழ்கின்றது. கொங்குத் தேசியம் இந்தியத் தேசியத்தில் தன் பொறுப்புணர்ந்து செயலாற்ற முற்படுமேயானால், அது கொங்கு