பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 99

மக்களுக்கு மட்டுமன்றி, தமிழக முழுமைக்கும், இந்திய தேசிய வாழ்வுக்கும் நாகரிக உலகுக்கும்கூட இத்துறையில் படிப்பினை யாகவும் வரலாற்றுப் பாடமாகவும் முன்மாதிரியாகவும் திகழத்தக்கது ஆதல் உறுதி.

குடியரசு மரபுக்கும் கொங்கு மக்கள் சமுதாயக் கட்டமைப்புக்கும் இடையேயுள்ள மரபு மலர்ச்சித் தொடர்பு, அதன் தோற்ற வளர்ச்சி, வரலாற்று விளக்கம், தேசிய வாழ்வில், நாகரிக உலக வாழ்வுகளில் அதற்குரிய பயன்வள அருமைப்பாடு ஆகியவை, வரும் பிரிவுகளில் விளக்கப்பட விருக்கின்றன.

2) பண்டைக் குடியரசு மரபின் ஒளி நிழற் படிவங்கள்: கொங்கு நாட்டுச் சமுதாயத் தன்னாட்சி மரபு

ரு

சாதி வருண முறையில் சாதி மரபும் வருண மரபும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற இரு வேறு மரபுகள் என்பது காணாமல், தொடக்ககால வரலாற்றாய்வாளர் இரண்டும் ஒன்றே என்று கருதினர். அத்துடன் அவ் இணைப்பட்ட முறைமை ஆரிய-திராவிட இனக்கலப்பின் விளைவு என்றும் ஆரியரால் முதலில் தமக்குள்ளும் (மூவருணம்), பின் மற்ற மக்கள் மீதும் (சூத்திரர்,தாழ்த்தப்பட்டவர், ஆதிவாசிகள்) சுமத்தப்பட்ட ஒன்று என்றும் விளக்க முற்பட்டனர்.

இந்திய சமுதாயமும் இந்து சமயமும் சாதி வருண முறையும் படைப்புடன் படைப்பாகக் கடவுளால் உருவாக்கப் பட்டவை என்றும், சாதி வருண முறையே இந்து சமய வாழ்வின் அடிப்படை என்றும் அணிமைக் காலங்களிலிருந்து இந்து சமய சமுதாய ஆட்சியாளர்கள் என்போர் வலியுறுத்தி வந்துள்ளனர்; வருகின்றனர். வரலாற்றாசிரியர், ஆராய்ச்சியாளர், புலவர், அரசியல் தலைவர்கள், சாதி முறைச் சமுதாயத்தை எதிர்க்கும் சமுதாய சமயச் சீர்திருத்தவாதிகள், புரட்சியாளர்கள் ஆகியோர் கூட (காந்தியடிகள் ஒருவர் நீங்கலாக) இந்த நம்பிக்கையில் உறுதியாகப் பங்கு கொண்டுள்ளனர்.

இவ்வாறு ஏற்கெனவே சமய சமுதாய ஆட்சி வகுப்பினரின் குழு நலங்கள் வற்புறுத்தி வந்துள்ள மரபுக்குப் புதிதாக எழுந்த ஆராய்ச்சியாளரின் விளக்கம் ஓரளவு உகந்ததாகவே அமைந் துள்ளது. ஏனெனில், இதன் அடிப்படையில் இந்தியாவெங்கும்