பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
102 ||

அப்பாத்துரையம் - 14



சாதி வருண மரபு முறை, மூவகுப்பு மரபு முறையினின்றும் அடிப்படைப் பண்புகளில் வேறுபட்டதன்று. ஏனெனில், இந்தியா வெங்கும் சாதிகள் பல, எண்ணற்ற பல்வகையினவாக மாறுபட்டாலும், 'வருணமுறை வடக்கே மூன்று (வேதமும் மூன்றே). தெற்கு கருத்தளவில் நான்கு (வேதமும் நான்கு), நடைமுறையில் ஒன்று என இடத்துக்கு இடம், காலத்துக்குக் காலம் வேறுபட்டாலும், எங்கும் அவ் இணை மரபு உண்மையில் மூவின வகுப்பாகவே இயல்கின்றது. அவையே, சமய சமுதாய ஆட்சி மரபும் தன்னுரிமையும் முழுதளவில் கொண்டு வாழும் பிராமணர் வகுப்பு; அவர்களுடனாக வட இந்தியாவில் அவர்களைச் சார்ந்து அவர்களுடன் ணைந்த அடுத்த இருவரும், அவ்வுரிமைகளைப் பேரளவில் அல்லது ஓரளவில் கொண்ட, ஆனால், உரிமை வரையறுக்கப்பட்ட பிராமண ரல்லாத சமுதாய ஆட்சி மரபு வகுப்பு; உரிமைகள் பெரிதும் சிறிதும் மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பு என்பவையே யாகும். இதனாலேயே உலகெங்குமுள்ள மூவகுப்புப் போராட்டத்துடன் போராட்டமாக, இந்தியாவிலும் இந்திய நாகரிகப் பரப்புகளிலும் பழைய மூவகுப்புகளும் புதிய மூவகுப்புகளும் தம்மிடையே நடத்தும் போராட்டமும் இணைந்து கலந்து, இந்திய மக்கள் வாழ்வு போராட்டத்தினுள் போராட்டமாக, இரட்டைப் போராட்டமாக நிலவுகின்றது.

நிகழ்காலச் சிக்கல்களை இறந்தகால மரபுகளால் விளக்குவதும், அவ் விளக்க ஒளிகளின் மூலம் சிக்கல் தவிர்த்து அல்லது சிக்கல் திருத்தி, வருங்கால வாழ்வைக் கட்டமைக்க உதவுவதும்தான் வரலாற்றின் பண்பு - வரலாற்றின் மெய்ம்மரபுக் காட்சியொளி ஒன்றுதான் இவ்வகையில் அதற்குரிய ஆற்றல் சான்ற திறம் வழங்குவதாகும். வழக்கறிஞரின் திறமை வாய்ந்த வாத ஆதாரக் கோட்பாடுகள், இவ்வகையில், சமுதாயத்துக்கு நீடித்து நிலையாக உதவமாட்டா.

இன்றைய சாதி மரபுகளுக்கும் வருண மரபுக்கும் இடையே அவ்வக் காலச் சட்டங்களும் ஆட்சியாளர் அல்லது ஆட்சி வகுப்பினர் தரும் விளக்கங்களும் வழங்கும் தொடர்பன்றி, வேறு மரபு வரன் முறையான தொடர்பு கிடையாது. சாதி மரபு, வருண மரபு ஆகியவையோ அவை சார்ந்த கருத்துகளோ, இந்திய