பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 103

சமுதாய வாழ்வில் அல்லது சமுதாய நடைமுறைக் கருத்துகளில் என்றேனும் நிலவியதாக வேத உபநிடதங்களிலோ, சங்ககால இலக்கியத்திலோ, பழங்கால டைக்கால இலக்கியங் களிலோகூடக் காணமுடியாது; இவற்றின் பெயர்கள்கூட அறியாதவை அவை. அத்துடன், இந்தியாவின் வரலாற்று மரபு களுடனோ, இலக்கிய வாழ்வுகளுடனோ, சமய வாழ்வுடனோ, இன்றளவும் இந்தியாவில் அவற்றிடையே காணப்படும் வேறுபாடு களுடனோ மேற்குறிப்பிட்ட இனக்கலப்புக் கோட்பாடு, அதன் புதிய பதிப்புகள்கூட ஒரு சிறிதும் பொருந்தவில்லை; முற்றிலும் முரண் பாடாகவே உள்ளன.

ஆரிய - திராவிட இனக் கலப்புக் கோட்பாட்டுக்கு ஏற்ப இந்தியாவில் சாதி வருண முறையின் செறிவிறுக்கம், பொதுவாக மேற்கிருந்து கிழக்காக, வடக்கிருந்து தெற்காகவடமேற்கிலிருந்து தென்கிழக்காகக் குறைந்து வரவில்லை; அத்திசைகளில் கூடியே வந்துள்ளது, வருகிறது! தவிர, வடக்கே மூன்று வேதங்களும் மூன்று வருணங்களும் மட்டுமே மதிக்கப்பட, தெற்கில் நான்கு வேதம், நான்கு வருணம் (பகவத் கீதை: சாதுர்வர்ணயம் மயாச்ரஷ்டம் - நான்கு வருண அமைப்பு என்னால் படைக்கப் பட்டது), என்ற வாய்ப்பேச்சினிடையே நடைமுறையில் நான்குமன்று, மூன்றுமன்று; ஒரே வருணம்தான் இன்றுவரை உள்ளது.இரண்டாவதாக, முதல் வருணத்தவராகிய பிராமணர் மேற்கைவிடக் கிழக்கிலேயே, வடக்கைவிடத் தெற்கிலேயே படிப்படியாக வாழ்க்கைச் சிறப்பு, கல்வியறிவுச் சிறப்பு (குறிப்பாக, அவ்வக்கால ஆட்சி மொழிக் கல்விச் சிறப்பு), செல்வச் சிறப்பு, அரசியல் பதவி மேம்பாடு ஆகியவற்றை உடையவர்களாகவும், அவ்வக்கால அரசியல் மாறுபாடு, ஆட்சிமொழி மாறுபாடு, ஆட்சிக்குரிய சமய, பண்பாட்டு மாறுபாடு ஆகியவற்றுக் கிசைய எளிதாகத் தம்மை மாற்றியமைத்துக் கொண்டுவிடும் மரபுடைய வர்களாகவும் உள்ளனர். மூன்றாவதாக, இந்துசமய வாழ்வில் வேதமுறைத் தெய்வ வழிபாடுகளும், வேதவேள்வி முறை அதாவது உயிர்ப்பலி வேள்வி முறைகளும் (உயர் குடியினரிடையே) அறவே மறக்கப்பட்டு, வேத மரபு அறியாத கோயில் வழிபாடும் சிவதிருமால் வழிபாட்டு நெறிகளுமே இந்து சமய மரபுகளாக என்றும்போல் இன்றும் நின்று நிலைத்து, வளர்ந்து வருகின்றன. நான்காவதாக, தம்மை ஆரியர் என்று