பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
104 ||

அப்பாத்துரையம் - 14



||-


கூறிக்கொண்டும் நம்பிக்கொண்டும் வரும் பிராமணரால்கூட, பசுக்கொலை உட்பட்ட வேதமரபின் கொலை வேள்வி முறைக்கு மாறான பசுவழிபாடும் ஊன்மறுத்த உணவும் பொதுவாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன, வருகின்றன. இறுதியான ஊன் மறுத்த இவ்வுணவுப் பண்பில் முனைத்த பிராமணர்கள் பெரிதும் தென் இந்தியப் பிராமணர்களாய், பஞ்ச திராவிடர் என்றே அழைக்கப்பெறுகின்றனர். ஊன் மறுத்த உணவும் பெரிதும் சைவ உணவு என்றோ,சிறுபான்மையாக வீர வைணவ உணவு அல்லது சமண உணவு என்றோதான் அழைக்கப் பெறுகிறதேயன்றி, ஆரிய உணவு என்றோ, பிராமண உணவு என்றோ அழைக்கப் பெறவில்லை.

இச் செய்திகள், இந்திய நாகரிகத்திலோ, சமய வாழ்விலோ, சமுதாயப் பண்பாட்டிலோகூட ஆரிய ஆதிக்கத்தைக் காட்ட வில்லை; மிகத் தெளிவாகத் திராவிட அல்லது தமிழின ஆதிக்கத்தையே காட்டுகின்றன. (பிராமணர்கள், வேளாளரையும் வள்ளுவரையும் போலப் பண்டைத் திராவிட சமயகுருமார் மரபில் வந்தவர்களே! இது கீழே விளக்கப்பட விருக்கிறது). புத்த சமண சமயப் பரப்பும், சைவ வீர வைணவ எழுச்சி மரபுகளும் மிகத் தெளிவாகத் தென்னகத்திசைத் தமிழினத் திராவிடப் பண்பாட்சியின் வலிமையையே காட்டுகின்றன.

வேத வேள்வியின் பலியீட்டு முறைக்கு ஒத்த பலியீட்டு முறைகளை இந்தியாவிலும் உலகெங்கும் சிறு தெய்வ வழிபாடுகளில் காணலாம். ஆகவே, வேதநெறியும் பலிவழிபாடும்

ண்டுமே ஆரிய நெறி, திராவிட நெறி என்ற வேறுபாடு கடந்து, மனித இன நாகரிகம் தோற்றுவதற்கு முற்பட்ட பழமையான மரபுகள் என்றே பொதுவாகக் கொள்ளல் தகும். ஆயின் நாகரிக உலகில், சிறப்பாக இந்திய சமுதாயத்தில், நாகரிகத்துக்கு முற்பட்ட பழமையில்கூட, நாம் கோமரபுக்குரிய அன்னை வழிபாடு, சிவ திருமால் வழிபாடு ஆகியவற்றின் தடங்களை அல்லது வேர் மூலமரபுகளைத்தான் காண்கிறோம். எனவே, வேதநெறி என்பது, இந்தியாவினுள் அல்லது அதற்கும் அப்பாற்பட்ட திராவிட நாகரிகத்தின் ஆசிய எல்லைக்குள் வந்த ஆரியர் மேற்கொண்ட பழமை மட்டுமே என்று கருதல் ஆகும். மேலை உலகில் (ஐரோப்பாவில்)கூட, ஆரிய அல்லது இந்தோ-