பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
106 ||

அப்பாத்துரையம் - 14



சமுதாய,சமய,பொருளியல் அடிப்படையையே மாற்றியமைக்கும் புரட்சிகரமான முயற்சியில் அவர்களைத் தூண்டுகின்றன என்பது கண்கூடு.

இனவேறுபாடு, சமுதாய வேறுபாடு, தொழில் வேறுபாடு, பொருளியல் வேறுபாடு ஆகிய அனைத்தின் பயனாக விளையும் தற்காலிக உயர்வு தாழ்வுகளின் பின்னணியில் இருந்துகொண்டு, உயர்வு தாழ்வுகளை நிலையான உயர்வு தாழ்வுகள் ஆக்குவதுடன், உயர்வுகளை மேன்மேல் உயர்வுகளாக வளர்க்கவும், தாழ்வுகளை மேன்மேல் தாழ்வுகளாகப் பெருக்கவும், வகை செய்வது அவ்வக்கால மேல்நிலை வகுப்பினரின் தனிப்பட்ட அரசியல் செல்வாக்கேயாகும். எனவே, இந்தியாவுக்கும், புற உலகுக்கும் இடையே மட்டுமின்றி இந்தியாவிலேயே இடத்துக்கு இடம், காலத்துக்குக் காலம், சூழலுக்கு சூழல் ஏற்பட்டுள்ள, ஏற்பட்டு வரும் சிறப்பு வேறுபாடுகளுக்கு வரலாற்றில் அவ்வக்கால இடச் சூழலுக்கேற்ப இத்தகைய அரசியல் செல்வாக்கின் போக்கில் ஏற்பட்டு வந்துள்ள, ஏற்பட்டுவரும் தனித்திருப்பங்களே காரணம் என்னலாம்.

ன்றைய உலகின் அரசியல் சார்பான மறைமுகக் குடியாட்சி (Political or Indirect Democracy) முறை, பண்டைக்கால உலகின் சமுதாயவியல் நேரடி குடியாட்சி, (Socialist or Direct Democracy) முறையிலிருந்து வேறுபட்டது என்பது மேலே காட்டப்பட்டுள்ளது. ஆனால், மேலை யுலகில் அடுக்கடுக்கான பண்படா இனங்களின் அலைபாய்வுகளால் கி.பி. 11ஆம் நூற்றாண்டிலிருந்து 16ஆம் நூற்றாண்டுக்குள்ளாகச் சமுதாய நேர்முகக் குடியாட்சி முறை தகர்வுற்று, முடியாட்சியிலும் சரி, குடியாட்சியிலும் சரி, தற்கால அரசியல் மறைமுகக் குடியாட்சிப் பண்பே நிலைபெற்று வந்துள்ளது. இந்தியாவுக்கு வெளியே, சிறப்பாக மேலையுலகில் னமுறை (Tribal Organisation) வேறுபாடு மட்டுமின்றி, குலமுறை அதாவது சமுதாய முறையான பாகுபாடும் முற்றிலும் அழிந்து விட்டதற்குரிய காரணம் இதுவே. இந்தியாவிலோ, இதே பண்படா அலைகள் தேசியப் பண்புகளில் ஓரளவு சீர்குலைவு உண்டு பண்ணியதன்றி அதனை அழிக்கவோ, முற்றிலும் மாற்றியமைக்கவோ இயல வில்லை. மேலையுலக ஆட்சியும் அதனால் ஏற்பட்ட பண்புத்