பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 107

தாக்குதல்களும் நுழையும் வரை இந்தியாவிலோ, கீழ்த்திசை யிலோ மறைமுகக் குடியாட்சி மரபுகள் வந்து புகவில்லை; குலமுறை அல்லது அரசியல் சமுதாய வகுப்பு இந்தியாவில் மட்டும் முற்றிலும் அழியாமல் சாதி வேறுபாடுகளுக்குரிய மூல அடிப்படையாக நீடிக்க வழி வகுத்த சூழல் இதுவே! மேலே சுட்டியபடி இக் குலமுறை மரபு இனக்குழு மரபு (Tribal Organisation) அன்று; அரசியல் சமுதாய முறை (Social Organisation) சார்ந்ததே என்பது கருதிக் காணத்தக்கது ஆகும்.

பண்டைச் சமுதாயக் குடியரசுகளுக்கும், முடியரசுகளுக்கும் இடையே ஏற்பட்ட போராட்டத்தில் நாகரிக உலக முழுவதிலுமே பழமையான குடியரசு முறைப்பட்ட ஆட்சிகள் தடங்கெட அழிந்துபோய் விட்டன. ஆயினும், அப்போராட்டம் அரசியல் துறையுடன் நின்று விடாமல் எங்குமே பண்புத்துறைப் போராட்டமாக மாறி நின்று நிலவியே வந்துள்ளது, வருகிறது. உலகப் பெருஞ்சமய மரபுகளை, சமய சமுதாய இயக்கங்களை அரசியல் இயக்கங்களைக்கூட இயக்கி வரும் மரபு இதுவே. ஏனெனில் அது அரசியல், சமய, சமுதாய, கலை, அறிவியல், பண்பாட்டுப் போராட்டங்களாக உலகெங்குமே வேறுவேறு வடிவில் நீடித்து வந்துள்ளது. இது, வருங்கால உலகநாடுகளின் ஒப்பியல் வரலாற்றாய்வுக்குரிய செய்தி ஆகும். இந்தியாவில் சாதி வருண முறை வேறுபாடுகளுக்கும், அது சார்ந்த சமய, சமுதாயப் பண்பாடுகளுக்கும், கருத்து மரபுகளுக்கும் வழிவகுத்த சூழல் இது!

சமுதாய ஆட்சி வகுப்பு, சமய ஆட்சி வகுப்பு ஆகிய இரண்டின் தோற்ற வளர்ச்சி தளர்ச்சிகள், அவற்றிடையே ஏற்பட்ட தற்காலிக முரண் பாட்டுப் பூசல்கள், அவற்றின் நிலையான கூட்டிணைவுச் செயற்பாடுகள் ஆகியவை நாகரிக உலகுக்குப் பொதுவானவையே. ஆயினும், இந்தியாவுக்கு வெளியே உலகெங்கும், சீன சப்பான் நாடுகளில்கூட, இந்த இரு வகுப்புகளும் நாளடைவில் இணைந்து ஒரே உயர்வகுப்பு அல்லது ஆட்சிவகுப்பாகியுள்ளது. நடுத்தர வகுப்போ மீண்டும் அடிநிலைப் பொதுமக்களிடமிருந்தே பெரிதும் புதிய வகுப்பாக எழுந்து வளர்ந்துள்ளது. ஆனால், கீழ்திசையில்கூட இந்தியாவில் அல்லது இந்திய நாகரிகப் பரப்பில் மட்டுமே சமய சமுதாய வகுப்புகள் போல இயங்கும் இரண்டு வகுப்புகளும் அரசியல்