பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 109

நீங்கலாக, நாகரிக உலக முழுவதிலுமே இந்த நிலை அணிமைக் காலம் வரை ஏற்படவில்லை. மேலையுலகில் அணிமை மேலையுலகிலும் சமய, ஆட்சி நாகரிகப் பண்பாடுகள் காரணமாக வழக்கிழந்த மொழிகளான இலத்தீனமும் கிரேக்கமும் அரபு மொழியும் மொகலாய இந்தியாவில் வழக்கிறந்த பழம் பாரசீக மொழியும் சமய ஆட்சி, அரசியல் ஆட்சி, இலக்கிய அறிவு பண்பாட்சி மொழிகளாக விளங்கியது போல, இந்தியாவில் புத்த சமண சமய காலங்களிலும் அவற்றைத் தொடர்ந்து இந்து சமய மறுமலர்ச்சிக் காலங்களிலும் மக்கள் மரபிழந்த அல்லது வழக்கிழந்த பாளி, பாகத, சமக்கிருத மொழிகளே இலக்கிய, சமய, அறிவு, பண்பாட்டு மொழிகளாகப் புது வளர்ச்சியடைந்தன. இவ்வாறாக, ஒரே தேசிய மொழிமரபு இந்தியாவில் தென்பால் மக்கள் மொழித் தேசியமான தமிழ் அல்லது தென்மொழித் தேசியமாகவும், வடபால் வழக்கிறந்த மொழித் தேசியமான பாளி அல்லது பாகத அல்லது சமக்கிருத மொழித் தேசியமாகவும் இருகிளை மரபுகளாக இலங்கிற்று; இந்தியாவில் மட்டுமன்றிச் சீன சப்பான் நீங்கலான நாகரிக உலகப் பரப்பு முழுவதிலுமே தமிழ் ஒன்றுதான் தொன்றுதொட்டு மனித இனமரபின் முழுச்சமய ஆட்சி (தெய்வ) மொழியாகவும் தேசிய ஆட்சி மொழி, சட்டமொழி, இலக்கிய பண்பாட்டு மொழியாகவும் இயங்கி வந்துள்ளது.

இந்த இரண்டு அல்லது மூன்று பண்பு மரபுகளுடன் ணைந்து செயலாற்றிய நான்காவது சூழல்மரபு, மூவாயிர ஆண்டுகளாக (கி.பி.1500 வரையும் அதுகடந்தும்) இந்தியாவின் வடமேற்குக் கணவாய்கள் வழியே புகுந்த பண்படா இனங்களின் அலைபாய்வுகள் அவற்றின் விளைவான அயற் பண்பாட்டுக் கலவைகள், மயக்கங்கள், பண்பாட்டுச் சீர்குலைவுச் சுழற்சிகள் ஆகியவையே யாகும்.

இம் மரபுகள், சூழல்கள் ஆகியவற்றிடையே நீடித்து வளர்ந்த குடியரசு - முடியரசுப் பண்பாட்டுப் போராட்டத்தில் நாம் மூன்று தளங்களைக் காணலாம். மூன்றும் ஒன்றன் பின் ஒன்றாக இந்திய நாகரிகப் பரப்பு முழுவதுமே அடுக்கடுக்கான அலைபாய்வுகளாய்ச் செயலாற்றி வந்துள்ளன. இப் பரப்பின் எல்லா இடங்களிலும் அவை, உடனடியாக ஒரே சமகாலத்தில்,