பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
112 ||

அப்பாத்துரையம் - 14



()


பசப்பி ஊக்குவித்து அவளைக் கொண்டே தாலி கட்டுவிக்கத் துடிப்பது போல, முடியரசர்களும் தொன்று தொட்டு மக்கள் ஆட்சி மரபுக்கு இயல்பான உரிமையுடையவராயிருந்த வேள் குடியினரையே தமக்கு முடிசூட்டும் தனி உரிமையுடையவராக அமைத்துக் கொள்வதில் ஆர்வமும் அக்கறையும் பெருமையும் கொண்டனர்.

இதே தளத்தில், மேலைநாட்டு முடியரசரைப் போலவே இந்தியாவிலும், முடிமன்னர், தம் பெருமக்கள், சமயகுருமார், பொதுமக்கள் உட்பட எல்லா நாட்டு மக்களையும் ஒருங்கே கவரும் முறையில் மொழி, சமயம், வாழ்க்கை வளம் ஆகியவை சார்ந்த தேசிய வளர்ச்சிகளை நேரடியாக ஊக்கி மேம்படுத்த முனைந்தனர். அத்துடன் மொழிப்புலமை, கலைத்திறம், சமய அறிவு, போர் வீரம், கல்வி, உழவுத் தொழில், வாணிகம் முதலிய துறைகளில் மேம்பாடு ஆகிய சிறப்புடையவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பரிசுகளும் பட்டங்களும், தனிப் பட்டய உரிமைகளும் விருதுகளும் பதவிகளும் மானியங்களும் வரிசைகளும் வழங்கி அவர்களைப் பெருமக்களுடன் பெருமக்களாக உயர்த்தினர். முடியரசரின் அரசியல் சுற்றமான பெருமக்கள் வகுப்பு இதனால் விரிவுற்று முடியரசருக்குரிய தேசிய ஆதரவுகள் மேன்மேலும் பெருகின. இவ்வாறாக, நாடு நகர்ப் பாதுகாப்புக்காகப் பண்டைக் குடியரசர் கட்டியெழுப்பிய கற்கோட்டை அரண் வரிசைகளைப் போல, முடியரசரும், தம் அரசுரிமைக்கும் ஆட்சிக்கும் நல்லுறுதிப்பாடும் மக்கள் ஆர்வ ஆதரவு வளமும் பெருக்கமுறும் வகை யில், இத்தகைய வகுப்பு வரிசைகளையே தம் தேசியப் பண்பாட்டுக் கோட் டையின் நல்லரண் வரிசைகளாகக் கட்டமைத்துக் கொள்ள முற்பட்டனர்.

மூன்றாம் தள ஊழியே, நாகரிக உலகில் இந்தியாவுக்கும், இந்தியாவில் தமிழகத்துக்கும் வேறு வேறுபட்ட தனித்தன்மை களும் கொங்குத் தமிழகத்துக்குத் தனி உயர் சிறப்பும் வழங்கிய ஊழி ஆகும். ஏனெனில், முதலிரு ஊழிகளை விட மூன்றாம் ஊழி இந்தியாவில் எளிதாக எதிர்ப்பின்றிப் பரவிற்று. ஆனால், தமிழகத்திலும் தென்னகத்திலும் அது எதிர்ப்புக்களைக் கடந்தே வெற்றிகாண வேண்டியதாயிற்று. அதேசமயம் பண்டைக் கொங்குத் தமிழகத்தில் பொதுவாக, அதன் அக நாடாகிய