பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
114 ||

அப்பாத்துரையம் - 14



(


மேற்கண்ட முறையில் உயர்த்தப்பட்ட புதுவகுப்பினரை ஆட்சியாளர் தம் அரசியல் சுற்றத்தினும் உயரிய அரசகுருமார் ஆக்கினர். அவர் களுக்கும் அவர்கள் ஆட்சிக்குப் படிப்படியாக மாற்றப்பட்ட கோயில்கள், சமயநிறுவனங்களுக்கும் மானியங்கள் தனிப்பட்ட முறையில் இறையிலி (வரியில்லாத) மானியங்கள் ஆக்கப்பட்டன. அவர்கள் வாழ்க்கைவளம், கல்விவளம் ஆகியவற்றிற்கென அரசர்கள் தனி அமைப்புகள் (சதுர்வேதி மங்கலங்கள், வடஇந்தியாவில் திரிவேதி மங்கலங்கள், வேதபாட சாலைகள், சமக்கிருதக் கல்விச்சாலைகள், சமக்கிருதத்திலேயே புதிய இலக்கிய, சமயநூல் வளர்ச்சியாதரவுகள் ஆகியவை) ஏற்படுத்தினர். இதுபோலவே எதிர்ப்பாளர் ஆகிய காரணத் தினால் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் புதிய ஆட்சியில் உரிமைகள் படிப்படியாக மறுக்கப்பட்டு அவர்கள் பொதுமக்கள் அல்லது பொதுமக்களிலும் கீழ்ப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

நாகரிக உலகெங்கும் நம் நாட்களுக்குள் தோன்றிவிட்ட மூவகுப்பு முறையைப் போன்ற ஒரு மூவகுப்பு முறையாக இந்திய நாகரிகப் பரப்பில் சாதி வருணமுறை அமைந்தவகை இதுவே. பழைய பெருமக்கள் வகுப்பிலிருந்து பிரிக்கப்பட்டு உயர்த்தப் பெற்ற புதுவகுப்பே உரிமை வரம் பெற்ற அல்லது தனித் தன்னாண்மை, தனிச்சிறப்புரிமைகள் பெற்ற உச்ச உயர் ஆட்சி வகுப்பாகவும், அவர்களையடுத்துப் பழைய ஆட்சி வகுப்பின் எஞ்சிய பகுதியினர் தம் உரிமைகளை மட்டாகக் கொண்டு உரிமை வரம்புபட்ட நடுத்தர வகுப்பாகவும், பழைய பொது மக்களும் உயர்வகுப்புகளிலிருந்து ஒதுக்கித் தள்ளப்பட்டவர் களும் பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பினர் களாகவும் உரிமைகள் படிப்படியாக அகற்றப்பட்டவராகவும் பிரிவுற்றனர். (எவ்வகைக் கட்டுப்பாடும் விரும்பாத குடியரசுக் குழுவினரே இவ்வூழியில் மலைப்பகுதிகளுக்குச் சென்று ஒதுங்கிய பழங்குடியினர் ஆவார்கள் என்று கருத இடமுண்டு. விந்தியப் பகுதிகளில் பேரரசமைத்து ஆண்ட கேரளா மரபினரை இதற்குச் சான்றாகக் கூறலாம்)

இந்தியாவில் புத்த சமண சமயங்கள் மேலோங்கியிருந்த ஊழியும் மேற்கண்ட குடியரசு, முடியரசுப் பண்பாட்டுப் போட்டிக்குரிய முதல் இரண்டு தள ஊழிகளும் கிட்டத்தட்ட