பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 115

காலத்தி

சமகாலத்தவை என்னலாம். இதுபோலவே சங்க கா லிருந்தும் மோரியர் ஆந்திரர் ஆகியோர் வீழ்ச்சிக் காலத்தி லிருந்தும், வடமேற்கிலும், வடக்கிலும் நேரடியாக ஆனால் தென் பெரும் பகுதியிலும் கீழ்ப்பெரும் பகுதியிலும் சைவ, வீரசைவ, வைணவ மலர்ச்சிகளின் துணைகொண்டும் வளர்ந்த இந்து சமய மறுமலர்ச்சி ஊழி, மேற்கண்ட முடியரசுக் கால மூன்றாம் ஊழி ஆகியவையும் கிட்டத்தட்ட சமகால ஊழிகளாக விளங்கி வந்துள்ளன.

முதல் இருதள ஊழிகளில் தமிழ் அல்லது தாய்மொழி அடிப்படையாக அமைந்த மக்கள் மொழித் தேசியம் மூன்றாம் தள ஊழியிலேயே படிப்படியாகப் புத்த சமண சமயங்களுக்குரிய பாளி பாகத மொழிகள் அல்லது புதிய இந்து சமய மறுமலர்ச்சிக் குரிய சமக்கிருத மொழி என வழக்கிறந்த மொழித் தேசியமாக மாறிற்று.

பழைய அரசியல் வகுப்பாகிய பெருமக்கள் வகுப்பிலிருந்து பிரித்து உயர்த்தப்பட்ட புதிய அரசியல் வகுப்பு 'அரசகுருமார்' வகுப்பு என்ற முறையில் சமயத்தின் பெயரால் மட்டுமன்றிச் சமக்கிருதத்தின் பெயராலும், பொது மக்களுக்கும், பெரு மக்களுக்கும் மட்டுமன்றி, தன்னை உயர்த்தி வைத்த அரசர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் மேலாகத் தன்னை மேம்படுத்திக்கொள்ள முடிந்தது. அரசரும் ஆட்சியாளரும் இதில் அவர்களின் வழியில் குறுக்கிடவில்லை மனமார ஒத்துழைத்தனர். ஏனெனில், அவர்கள் கோரிய சமய உரிமை யாவரையும் கவர்ந்தது. தவிர, புதிய முடியரசர் மட்டுமன்றி, எல்லா அரசர் - பேரரசருமே அவர்களால் உடனடியாகப் பெற்ற ஆதாயம் மதிப்பிடற் கரியதாயிருந்தது.

இதுவரை அரசர்களால், போர் வலிமை மூலம் குடியரசர்களை வீழ்த்தவும், நல்லாட்சியால் மக்களைக் கவரவும் மட்டுமே முடிந்தது. மக்கள் தம் பழைய குடியரசு மரபை மறக்கும்படி செய்ய அவர்களால் முடியவில்லை. பழைய பெருமக்கள் மரபோ, அதில் இடம்பெற்ற பழைய சமய குருமார் மரபோ, புலவர் அறிஞர் கலைஞர் மரபுகளோ முடியரசருக்குத் தம் ஆதரவைத்தான் வாங்க முடிந்தது. குடியரசு மரபை மக்கள் மறக்கும்படி செய்வதோ, அதைத் தாமே மறந்து விடுவதோகூட அவர்கள் கனவுக்கும் ஆற்றலுக்கும் இயல்புக்கும் அப்பாற்பட்ட