பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 119

மற்றொரு புறம் அதற்கிசைந்த உரை விளக்கங் களாக அவ்வூழிகளில் தமிழக, தென்னக, இந்தியப் பரப்புகளில் எழுந்த சாதிப்பெயர் மரபுகள் விளங்குகின்றன.

மேலே காட்டியபடி, வேள் (பழம் பன்மை: வேளிர்) என்ற குடியரசு மரபுக் காலச் சொல்லுக்கு, இறைவன், சமய ஆட்சித் தலைவர், வேட்கோவர், (வேளார், பூசனையாளர், குயவர்), அரசியல் ஆட்சித்தலைவர், சமுதாய ஆட்சித்தலைவர், குடும்ப ஆட்சித்தலைவர், காதல் தலைவர் முதலிய எத்தனையோ பொருள்கள் உண்டு. ஆனால், உழவர் என்ற ஒரு பொருள் மட்டும் கிடையாது. இதற்கேற்றபடியே, இச் சொல்லின் புது விரிவாகிய வேளாண்மை, வேளாளர் என்ற சொற்களுக்கும் தொடக்க காலங்களில் உழவு, உழவர் என்ற பொருள்கள் இருந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் உழவர் வாழ்வையே விரித்துரைக்கும் தமிழரின் தனி இலக்கியத்துறை ஒன்று உண்டு. அது வேளாண் பாட்டு என்று இன்றுவரை அழைக்கப்பெறவில்லை. பள்ளுப்பாட்டு என்றே வழங்கப்பட்டு வருகிறது. (பள்ளர்-உழவர், பழனம்-வயல். மலையாள மாநில வழக்கு: செறுமர்-உழவர், செறு- வயல்) தவிர திருக்குறளில் உழவு என்ற ஓர் அதிகாரமே உண்டு. அதில் இச் சொற்கள் வழங்கப் பெறவில்லை. அதே சமயம், வேள்வி, வேளாண்மை ஆகிய இரு தொடர்புடைய சொற்களை நாம் தொடர்புடைய பொருள்களிலேயே விருந்தோம்பல், ஒப்புரவுடைமை, ஆள்வினையுடைமை ஆகிய அதிகாரங்களில் காண்கிறோம். ஆனால், இங்கே அவற்றின் பொருள் உழவு அன்று; அதிகாரப் பெயருடன் பொருந்திய நிலையில் அவற்றின் பொருள், உரையாசிரியர்களே காட்டுகிறபடி, ஒப்புரவாட்சி அதாவது அறிவாலும் முயற்சியாலும் பண்பாலும் நன்பொருள் ஈட்டி அதனைக் கொண்டு மக்கள் வாழ்க்கை வளப் பயிர் அல்லது மக்கட் பண்பு வளப் பயிர் வளர்த்தலாகிய இன உழவாண்மைப் பண்பு என்பதேயாகும். வேள்வி அல்லது வழிபாடு என்பதும் உண்மையில், இப் பண்புகளின் கனவியல் உருவான இறைமை வழிபாடு அல்லது இப் பண்பு பேணல் என்பதேயாகும்.

சங்க இலக்கியத்தில், பதினெண் கீழ்க்கணக்கு ஏடுகளில் ஒன்றான திரிகடுகம் 'வேளாளன்' என்ற சொல்லுக்குத் தரும் பண்பு விளக்கமும் இதுவேயாகும். அச் சொல்லுடன் தாளாளன்,