பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
120 ||

அப்பாத்துரையம் - 14



||-


கோளாளன் ஆகிய சொற்களும் அப் பாட்டில் ஒரு நிலைப் படத்

தொடர்பு படுத்தப்பட்டுள்ளன.

‘வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்;

தாளாளன் என்பான் கடன்படா-வாழ்பவன்; கோளாளன் என்பான் மறவாதான்: இம் மூவர் கேளாக வாழ்தல் இனிது.

இங்கே தாளாண்மை என்பது, ஒருவன் கடன்படாமல் வாழ்தல், அதாவது தன் உழைப்பையே தான் நம்பி, பிறர் உழைப்பின் பயனாகப் பிறனைச் சார்ந்து வாழாமல், தானே ஈட்டும் தன்னாண்மை முயற்சியாளன் என்ற பொருளைச் சுட்டுகிறது.கோளாண்மை என்பது மறவாமை அதாவது, ஒருவன் கடமையும் குறிக்கோளும் மறவாது, ஈட்டுதல் வளத்துக்கு உரமாயுதவும் முறையில் பட்டறிவாலும் கல்வியாலும் ஆய்வாலும் பெறும் அறிவு கலைத் துறைகளின் பயிற்சி மறவாது கடைப்பிடித்து நிற்பது என்ற பொருள் தருவது ஆகும். இவ்விரு பண்புகளும் கருவிப் பண்புகள் மட்டுமே; ஒன்றுடன் ஒன்று உறவு கொண்டு தொடரும் இவை வேளாண்மைக்குரிய படிகள், வேளாண்மையையே இலக்காகக் குறிக் கொண்டவை ஆகும். இக் குறிக்கோட் சொல் உண்மையில் வேளின் உழவாண்மை என்ற உருவகப் பொருளுடையதாய், குடியரசாட்சி குறிக்கொண்ட இலக்கான இன உழவாண்மை அதாவது மக்கள் வாழ்க்கை வள, பண்பு வளப் பயிர் வளர்த்தல் என்ற பொருள் காட்டுவதாகும்.

இலக்குப் பண்பின் பெயர் என்ற முறையில் வேளாண்மை என்ற சொல்லும் பண்பும் பொருளும், தாளாண்மை (அருந்திறலாண்மை), கோளாண்மை (இனவள அறிவாண்மை) என்ற மற்ற இரு கருவிப் பண்புகளையும் உள்ளடக்கியதேயாகும்.

திருவள்ளுவரும் அவரைப் பின்பற்றிய, சங்ககாலப் புலவர்களும் கம்ப நாடர் போன்ற பிற்காலத் தமிழ்க் கவிதை மரபினரும் மனித இன வாழ்வின் எல்லாவள ஆட்சி பண்பாட்சித் துறைகளையுமே குடும்ப வாழ்வையேகூட இனப் பேருழ வாண்மைத் துறைகளாகவே உருவகித் துள்ளனர் (தமிழ்ச் சொல் புலம்-அறிவு, வயல், துறை, நாடு). திருவள்ளுவர் வில்லை ஏராகக் கொண்டு வீரப்புகழ்ப் பயிர் வளர்ப்பவர் (வில்லேருழவர்) என

-

-