பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
122 ||

அப்பாத்துரையம் - 14



||-


மாகிய மூன்றாம் வருணப் பெயர் 'வேள்' என்ற பழந்தமிழ்ச் சொல் மரபில் வந்த பழைய இருக்குவேத மொழிச் சொல்லான விச் (நாட்டு மக்கள்) என்ற சொல்லடியாகவே மலர்ந்துள்ளது காணலாம். வேளாண்மை என்ற சொல்லின் மூலமுதற் பொருள் உழவு அன்று; வாணிகமும் அன்று; அது ஆளுபவர் ஆளப்படு பவர் வேறுபாடற்ற கனவியற் குடியாட்சிப் பண்பே என்பதை இது தெற்றெனக் காட்டுகின்றது.

தொல்காப்பிய இலக்கணமரபில் மருதநில அல்லது ஐந்திணை நில ஆட்சியாளர் அல்லது தெய்வம் வேந்தன் என்றும், அந் நிலத்தின் அல்லது நிலங்களின் எல்லாக் குடியரசு மரபுக் குடியாளருமே வேளாளர் என்றும் அழைக்கப்பெற்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அம் மரபில் வேளாளர் என்ற சொல் மருத நிலம் வாழ் மக்கள் என்ற பொதுப் பொருளும், ஐந்திணை ஆளும் மக்கள் என்ற சிறப்புப் பொருளும் ஒருங்கே கொண்டதன் சூழல் விளக்கம் இதுவே! (ஏனெனில், மருத நிலமே அன்று நாடு, நாட்டின் அக நாடாக விளங்கிற்று. இது கீழே விளக்கப்பட விருக்கிறது.)

'வேளாண்மை என்ற சொல்' இன்று உழவாண்மை என்ற நேரடிப் பொருளில், சில பல நூற்றாண்டுகளாகவே வழங்கத் தொடங்கியுள்ளது. ஆனால் அச்சொல் தொடக்கத்தில் உவம உருவக சொல்லாய், இன உழவாண்மை அதாவது குடியரசு பண்பாட்சியே குறித்து, உவம - உருவகப் பொருளும் வேள் என்ற வேர்ச்சொற் பொருள்களும் பண்புகளும் மரபுகளும் மறக்கப் பட்ட பின்னாட்களிலேயே உழவாண்மை என்ற நேர் பொருள் சுட்டத் தொடங்கிற்று என்னலாம்.

கிட்டத்தட்ட இதே காலச் சூழலிலேயே, பழந்தமிழ்ச் சொற்களான நூல் (Science), பனுவல் (Research), பட்டாங்கு (Philosophy) ஆகியவையும் பொருள் மரபு கெட்டழிந்து,புத்தகம் (நூல், பனுவல்), மெய்ம்மை அல்லது சாத்திரம் (பட்டாங்கு) என்ற பொருள்கள் சுட்டின.

திருக்குறளையும் சங்க இலக்கியத்தையும் போலவே, தொல்காப்பியமும் ஒரே ஒரு நூற்பாவில் வேளாண்மைக்கும் உழவுக்கும் உள்ள இத் தொலைத் தொடர்பைச் சுட்டிக் காட்டுகிறது.