பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
126 ||

அப்பாத்துரையம் - 14



பொதுவாக, முதல் இருதள ஊழிகளிலேயே, பொது மக்கள்,பெருமக்கள் என்ற இருவகுப்பு வேறுபாடு மெல்லத் தலை தூக்கிற்று என்னலாம். ஏனெனில், குடியாட்சியில் ஆள்வோர்- ஆளப்படுவோர் வேறுபாடு கிடையாது.ஆனால் முடியாட்சியில் தொன்றுதொட்டு நிலவிய தனி உயர்வு பெறாத பழங்குடிகளே பெரிதும் பொதுநிலை மக்களாயினர். புதிய குடியாட்சி மரபினரும் (தன்னாட்சி நகர், தன்னாட்சித் தொழிற் குழுக்கள் ஆகியவை சார்ந்தவர்களும் அவர்களுடன் வந்த அருந்திறலாளர், அறிவாளர், பெருந்தொழிலாட்சியாளர், முடியரசரால் உயர்த்தப் பட்டவர்கள் ஆகியோரும்) பெருமக்கள் வகுப்பாக திரண்டனர். மேலே கண்டபடி, குடியாட்சி மரபின் புதுமலர்ச்சி யால் வந்த வாணிகத் தொழில் நிறுவனக் குழுக்கள் தன்னாட்சி நகரக் குழுக்கள் ஆகியவையும் புது மரபுகளாக இணைந்து பெருமக்கள் வகுப்பைப் பெருக்கின. வழி வழி மரபாக வந்த பட்டங்கள் அவர்கள் உயர்வுகளின் அல்லது பிரிவுகளின் சின்னங்கள் ஆயின.

தமிழகம், தென்னகம் உட்பட இந்தியா எங்குமே (புற உலகில் கூட) இம் மன்னரூழிக் காலப்பட்டங்களே பல சாதி மரபு, குடிமரபுகளின் பெயர்களாகவோ அல்லது மரபுச் சின்னங் களாகவோ அல்லது அதன் மதிப்புக்குறியீடுகளாகவோ பெயருடன் ஒட்டிய குடிப்பெயராக வழங்குவது காணலாம். இயற்பெயர்கள் போலன்றி தூய தாய்மொழிச் சொற்களாய், அதாவது தாய்நில தாய் இனமரபுச் சொற்களாய் விளங்கும் இப்பெயர்கள், மனித - இன வரலாற்றாய்வுத் துறையில் உயிர்நிலை முதன்மையானவை என்று கருதத்தக்கவை ஆகும்.

பட்டங்களின் எல்லையும் சாதிமரபுகளின் எல்லையும் எப்போதும் முற்றிலும் ஒன்றுபட்டு நிலவுவதில்லை. சில பட்டங்கள் சாதி அல்லது சாதிக்குழு குறிப்பவையாகவும், சில பட்டங்கள் வேறுவேறு சாதி மரபு, வருணமரபுகளுக்கிடையில் விரவியவையாகவும் வழங்குகின்றன. ஏனெனில், சாதி மரபுகள் என்பவை குடி மரபு, குல மரபு, வகுப்பு மரபுப் பட்டங்களின் வேறுபாடுகள், தொழிற்குழுக்கள் தன்னாட்சிக் குழுக்கள் முதலிய பல்வேறு மரபுகள் வழிவந்தவை ஆகும். அத்துடன் மூன்றாம் ஊழிக்காலத்தில் புதிய வகுப்பு பரப்பிய வருணமுறையாட்சியில்