பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
128 ||

அப்பாத்துரையம் - 14



) ||-


கொள்வதும் உண்டு) முதலியவையும் இது போன்றவை யேயாகும்.

வேளிர் அல்லது வேள் குடியினர் அல்லது அதற்கு ஈடான சிறப்புப் பெற்றவர்கள் மன்னரால் சிற்றரசர் அல்லது ளவரசராகக் கருதப்பட்டு பிள்ளை என்ற பட்டம் வழங்கப் பட்டனர். முடியரசுக்குரிய கூரிய அல்லது முக்கதுப்புடைய மணிமுடியன்றி (Crown) இளவரசன் அணியும் வளைவானமுடி (பண்டைத்தமிழ்: மண்டை; ஆங்கிலம்; Coronet) பண்டை வேளிருக்குரியதேயாகும். உலகெங்கும் பெருமக்கள் அணியும் தலைப் பாகைக்குரிய மூலமரபு இதுவே என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது ஆகும்!

மேல்கடற்கரையில், யூதர் அல்லது சிரியா நாட்டுக் கிறித்துவ வணிகரும் அரபு நாட்டு இசுலாமிய வணிகரும், இதற்கு ஈடான பட்டமாக மாப்பிள்ளை (Mappillas சிரிய கிறித்துவர்; Moplahs, அராபிய இசுலாமியர்) என்று சிறப்பிக்கப்பட்டனர்.

தந்தை பெயர் பிள்ளைக்குப் பட்டமாவதுபோல, சமுதாய ஆட்சித் துறைகளிலும் சிறப்புவாய்ந்தவர்க்கு மன்னர் தம் பெயர், மரபுப்பெயர், விருதுப்பெயர் ஆகியவற்றையே பட்டமாக அளித்தனர். மன்னர் மரபினரேயன்றி மன்னரை வென்ற பிற மன்னரும் அவர்களின் படைத்தலைவரும் துணைவரும் வெல்லப்பட்டவர் பெயர்களை விருதுப் பெயர்களாக ஏற்றனர். இதனால் பல்லவரும் கலிங்கரும் அவர்களை வென்ற அரசரும் படைத் தலைவர்களும் அவர்களால் பட்டமளிக்கப்பட்ட வரும் ஒருங்கே பல்லவராயர், காலிங்கராயர் போன்ற பட்டங்கள் தாங்கினர். (வேளாளரிடமும் அவர்களுடன் ஒத்த வேறுபல மரபினரிடமும் இவற்றை நாம் இன்று காணலாம்)

பிள்ளை, மாப்பிள்ளை என்பது போன்ற, ஆனால், அதனினும் மதிப்புமிக்க பட்டமாக தம்பி, தங்கச்சி, நம்பி, நம்- தம்பி, (நம்பியார்-கேரள மக்கள்திறக் குருமார்), நம்பூதிரி (நம்பிதிரு), தம்பிரான் (திருவாங்கூர் அரசன் தந்தைமரபு), எம்பிரான் திரி (எம்பிரான் திரு) சாமூதிரி(சாமிதிரு) போன்ற பட்டங்கள் வேள் நிலையிலேயே உரிமையுடன் வாழ்ந்த பெருமக்கள், சமயகுருமார் ஆகியோருக்குத் தரப்பட்டன.