பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
130 ||

அப்பாத்துரையம் - 14



சேணியர் (சேண்-உயர்வு), சாலியர் (சால், சால்பு-மேன்மை), ஆரியர் (ஆர்-நிறைவு), பட்டாரியர் (படு-முனைப்பான, அல்லது பட்டாசாரியார்; பட்டம், ஆசிரியர்) எனச் சிறப்பிக்கப் பட்டனர்.

விசுவாமித்திரர் மரபில் வந்த ஆரிய வேள்விக்குருமார், வேள்வி சார்ந்த கலைகளான (வேதாங்கங்கள்) மருத்துவம், அறுவை, வானூல், நிலக்கணிப்பு ஆகிய துறை அறிஞர் ஆகியோர், சோமாசி (சோமயாஜி, சோமயாகம் செய்தவர்), சட்டர்ஜி (சத்ரஜித்-சத்ர-வேள்வி, வீரம்), ஆசிரியர் அல்லது ஆசாரியர் (ஆச்சாரி என்ற தமிழ் வடிவில் பிராமண மரபு, ஆசாரி என்ற தமிழ் வடிவில் கம்மியர் மரபு), வேளார் (குயவர் அல்லது வேட் கோவர்) ஆயினர். மூன்றாம் ஊழியில் இவர்களில் பலர் நடுத்தரவகுப்பினும் கீழ்நிலைப்படிகளுக்குத் தாழ்த்தப்பட்டு அணிமைக் காலங்களில் இடங்கை வலங்கைப் போராட்டத்தில் இடங்கையராக நின்று போராடும் நிலைபெற்றனர். சௌராட்டிர நாட்டுப் பிராமணர், கேரளத்தில் அப்பளமிடும் பிராமணர், நாடகமாடும் பிராமணர் ஆகியோர் நிலையும் இதுவே.

மூன்றாம் ஊழிக்காலத்தில், குடியரசு மரபில் வளர்ந்த புத்த சமண சமயங்களில் நீடித்த பெருமக்கள் வகுப்பினர் (வேளிர் அல்லது சத்திரியர்), வட மாநிலத்தில் நான்காம் வகுப்பினர் (சூத்திரர்) ஆக்கப்பெற்றனர் என்பதைப் பேரறிஞர் பண்டாரகர் அம்பேத்கர் (Who Are Sudras?) விளக்கியுள்ளார்.

குடியரசு மரபில் வந்த ஊர்க்கணக்கர் மரபு, தென்னகத்தில் கருணிக வேளாளராகவும் (வள்ளலார் பெருமான் பிறந்த மரபு), குசராத்தில் நாகர பிராமண மரபாகவும் வட இந்தியப் பரப்பில் நாகரி எழுத்தைப் படைத்து வழங்கிய காயஸ்த பிராமண மரபாகவும் இயல்கின்றது.

உழவுத் தொழிலில் சிறந்தவர்க்கென்று, தமிழகத்திலன்றி வேறு எந்நாட்டிலும், சங்க காலத்திலன்றி வேறெக்காலத்திலும் அரசரால் தனிப் பட்டம் வழங்கப்பட்டதாக அறியக் கூடவில்லை. அத்துடன் அந்நாளில் வேளிர் மரபினரின் ஒரு பகுதியினர் மட்டுமே தனிப்பட அருந்திறப்பெருந்தொழிலாய் அன்று நிலவிய இத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர் என்று கருத இடம் உண்டு. னெனில் கிழார் என்ற இதற்குரிய பட்டம் பெற்றவரும் பெறாதவரும் சங்க காலத்தில் இம் மரபுக்குரிய புலவர்களுள்