பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 131

டம்

பெற்றிருந்தனர்

என்று


காண்கிறோம். உயர்

உழவாண்மையை உள்ளடக்கிய வேளாண்மை மலர்ச்சி சங்க காலத்துக்கு முன்னரே பெருகத் தொடங்கி விட்டது என்பதை இது காட்டுகிறது. சங்க காலத்துக்குப் பின்னோ, படிப் படியாக நாட்டின் மற்றத் தொழில்கள், வாணிகம் ஆகியவற்றைத் தாண்டி உழவாண்மையே பெரும்பாலார் தொழிலாகி (பஞ்சம், வறுமை காரணமாக) வளர்ந்து விட்டதனால் வேளாண்மை என்ற பெயரே நாளடைவில் உழவாண்மை என்ற நேரடிப் பொருள் கொள்ளத் தொடங்கிவிட்டது.

தொழிலிலும் வாணிகத்திலும் செல்வ வளத்திலும் கல்வி வளத்திலும் உலகில் முதலிடம் வகித்த தமிழகமும், இந்தியாவும், சீனமும், கீழை நாடுகளும் அணிமை அயலாட்சிக் காலங்களி லேயே (கி.பி. 16ஆம் நூற்றாண்டின் விசயநகர ஆட்சிக்குப் பிற்பட்டே), திடுமெனச் சரிவுற்று, மீண்டும் முற்றிலும் சிறுதிற உழவும் சிறுதிற அரைகுறைக் கல்வியும் சிறு கைத்தொழிலும் நம்பி வாழ வேண்டிய பண்பிலா அடிமை வறுமைப் பரப்புகளாக மாறின. அயலாட்சியாளர், மேலையுலகப் புதிய முதலாளித்துவ வேட்டையாளர் ஆகியோருக்கும் கீழையுலகச் சாதி வருணக் குழுநல வேடருக்கும் இந் நிலை ஒருங்கே உகந்ததாயிருந்தது. தேசியத் தலைவர்கள் கூட வரலாறும் மரபும் மறந்த இந்தச் சூழ்நிலையே பண்டை இந்தியா, என நம்பி அதனைக் கிராம இந்தியா, எளிய வாழ்வு வாழ்ந்த இந்தியா, ஆன்மிக இந்தியா என அயலாட்சி வகுப்பினர் காதுகளுக்கினிதாகப் பாடிவந்தனர். (கார்ல் மார்க்சும் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றறிஞர் சிலரும் இம் மயக்க மாறாட்டத்தைக் கடிந்து மெய்ம்மை சுட்ட முயன்றுள்ளனர்).

கோவரசு மரபின் மூவொருமை இறைமை மலர்ச்சியுடன் மலர்ச்சி யாகவே தமிழர் முப்பால் அல்லது மூவேதம் (பழைய ஆரியரின் மூவேதம் இதே மரபினதே), முப்பால் நெறி, முத்தமிழ், இவற்றுடனொத்த தொழில், கலை, அறிவுத் துறைகளின் மும்மை நூல்களில் பயின்றவர் என்ற முறையிலேயே பண்டைச் சமய குருமாருக்கும் தொழிலாசிரியருக்கும் (அம் மரபிலே இன்று பிராமணர் கம்மியர் போன்றோருக்கும்) முப்புரி அல்லது மும்மை முப்புரிநூல்,படித்தவர் என்ற சிறப்புத் தோன்ற மதிப்புச்