பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
132 ||

அப்பாத்துரையம் - 14



சின்னமாயிற்று. அக ஆட்சிச் சின்னமாகிய மூன்று முடியிட்ட தாலி மரபினை ஒத்த புற ஆட்சிச் சின்னமே இது என்பது- நோக்கத்தக்கதாகும். (வெற்றிச் சின்னமாகிய பொட்டு நெற்றியில் இடப்படுவது போல, ஆட்சிச் சின்னங்களாகிய

கழுத்திலும் தோளிலும் அணியப்படுகின்றன).

வை

தமிழரிடையே நான்காம் வேதம் என்ற மரபு, திருக்குறளில் முப்பாலுக்கு ஆன்மிகத் திறவுகோலாக வைக்கப் பெற்றுள்ள பாயிரம் (அகல் இந்திய மரபில் உபநிடதம், ஆகமம் போன்றது) குறிப்பதாகும்.அரசகுருவினராக விளங்கிய மூன்றாம் ஊழிக்குரிய புதிய வகுப்பினர் இதே மரபில் தமக்கென வகுத்துக்கொண்ட நான்காம் வேதமே அதர்வ அல்லது அதர்வண வேதம் (அதர்வன்-அரசகுரு) ஆகும். தமிழகத்துக்கு வெளியே நால்வேத மரபு முற்றிலும் பரவாத நிலையின் விளக்கம் இதுவே.

நாகரிக உலகினின்று இந்தியா வேறுபட்டு உயர்வுற்று வழிகாட்டும் தலைமை நிலையே வகிப்பதற்குக் காரணமா யிருந்தது வேள்புலக் குடியாட்சி மரபும் அதன் வழியிலிருந்து பெரிதும் விலகாதிருந்த (ஐங்குரவர் மரபு பேணிய) ஆதி முடியரசு மரபுமேயாகும். ஆனால் இந்தியா வேறு பட்டதனுடன் அமையாமல், முதலில் சமய சமுதாய அறிவுப் பண்பாட்டிலும் பின் தொழில் வாணிகச் செல்வவளங்களிலும் படிப்படியாகத் தாழ்ச்சியுற்று அடிமைக் கீழ்திசையின் அடிமை நாயகமாக மாறி வந்தமைக்கு முடியரசின் இரண்டாம், மூன்றாம் ஊழிகள், சிறப்பாக மூன்றாம் ஊழியே காரணம் ஆகும். அவ்வூழிகளில் முற்றிலும் மறக் கடிக்கப்பட்டு வந்துள்ள குடியரசு (தமிழ்) மரபுகளும், குடியரசுப் பண்புகளும் பண்பாடுகளுமே உயிர் மலர்ச்சியிழந்த சாதி வருண மரபு, அதன் சார்பால் சம நிலையுணர்வும் உயிர்த்துடிப்புமற்ற இந்து சமய வாழ்வு, இந்திய தேசிய வாழ்வு ஆகியவற்றைச் சீரமைத்து உயிர்ப்பூட்ட வல்லவை ஆகும். அதற்குரிய திறவு மேலையுலக நாகரிக மரபில் இல்லை. தமிழ் மரபில், கொங்குத் தமிழக மரபிலேயே பொதிந்து கிடக்கிறது.

நாகரிக உலகில் இந்தியாவின் வேறுபாடுகளை மட்டுமின்றி, இந்தியாவில் தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்குப் பரப்புகள், தென்னகம், தமிழகம் ஆகியவற்றின் வேறுபாடுகளையும்,