பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 135

(திருமகள்), ஆற்றல் தெய்வம் அல்லது ஆட்சித் தெய்வம் (மலைமகள்) ஆகியோரையே பண்டை இந்து சமயம் பெண் பாலராகக் கொண்டிருந்தது. ஆனால், சமக்கிருத மரபில் வந்த புதிய இந்து சமயமோ (சுமார்த்த இந்து நெறி) உச்ச உயர் வருணப் பெண்டிர், சீதை துரோபதை போன்ற காவிய அன்னையர், கலைமகள் மலைமகள் போன்ற பெண் தெய்வங்கள் உட்படப் பெண்பாலினம் முழுவதையுமே (சமக்கிருத நாடகங்களில் சமக்கிருதம் பேச உரிமையற்ற) கல்வியுரிமை, செல்வ உரிமை, ஆட்சியுரிமை மறுக்கப்பட்ட நான்காம் வகுப்பினராக்க முனைந்தது. பெண்கள் தம் சாதி வருண மரபினும் உயரிய மரபினருக்கே உரியவர் என்ற மரபு முறை இப் பரப்புகளில் செயற்படுத்தப்பட்டு வந்தது. இந்தியச் சட்டத்தில் மருமக்கள் தாயமுறை, தாய பாகமுறை போன்ற தனி வேறுபாடுகளுக்குரிய பரப்புகள் இவையே.

சமக்கிருத இன்ப நூல்கள் (திருக்குறள் போன்ற தமிழ் மரபு நூல்களின் மரபினின்று விலகி) பெண்டிரை முற்றிலும் கவர்ச்சிச் சரக்காக்கிவிட முனைந்துள்ளன. தற்கால மேலையுலக நாகரிகமும் அதன் அடிவருடிகளான பல எழுத்தாளர் மரபுகளும் இன்று இதையே பின்பற்றி வருகின்றன.

தமிழக, தென்னக, இந்திய வரலாறுகள் காட்டும் இந்தப் பின்னணியிலேயே நாம் கொங்குத் தமிழகத்தின் வரலாற்றை, சிறப்பாகச் சமய சமுதாயப் பண்பு பண்பாடுகளின் வரலாற்றைக் காண்டல் வேண்டும். ஏனெனில், கொங்கு நாட்டு மக்களும் அறிஞர்களும் வரலாற்றாசிரியர்களும் திணைநில ஆய்வாளர் களும் காணும் கொங்கு நாட்டின் தனித்தன்மை என்பது உண்மையில் மேற்கண்ட மூன்றுதள ஊழிகளுக்கும் மிகுதி ஆட்பட்டு மாறுபடாத நிலையேயாகும். இத்தனித் தன்மையை நாம் முக்கூறுகள் கொண்ட தனித் தன்மையாக வகுத்துணரலாம்.

முதலாவதாகக் கூறத்தக்கது மிகு பழமை ஆகும். நாகரிக உலகம், இந்தியா, தமிழகம் ஆகிய பரப்புகளில் முடியரசின் மூன்று ஊழிகளிலும், சிறப்பாக இரண்டாம் மூன்றாம் ஊழிகளிலும், முனைப்பாக மூன்றாம் ஊழியில் ஏற்பட்ட புது மாறுதல்கள் கொங்குப் பரப்பை அணிமை அயலாட்சிக் காலம் வரை, இன்றுவரை கூட, முற்றிலும் பாதிக்கவில்லை. எனவே