பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
136 ||

அப்பாத்துரையம் - 14



() ||-


கொங்கு நாட்டின் தனித்தன்மை இன்றைய கொங்கு நாட்டுக்கு மட்டுமே உரியதாயினும், அதன் பழமை தமிழக முழுமைக்கும் இந்தியாவுக்கும் நாகரிக உலகுக்குமே பெரிதும் உரியது ஆகும்.

இரண்டாவது கூறு, அத் தனித்தன்மையின் பழமை, அல்லது அப் பழமையின் தனித் தன்மை ஆகும். ஏனெனில், இத் தனித் தன்மைக்குரிய பழமையின் சாயல்கள் சங்க காலத்திலேயே, அதற்கும் முற்பட்டே தொடங்கியவை. அவை, கொங்கு மக்கள் உள்ளத்தில் ஊறி வழி வழி மரபாக வந்தவை; கொங்கு நாட்டின் ஐந்திணை நிலமரபில் பிறந்து வேள்புலக் குடியரசு மரபின் ஐந்திணை மலர்ச்சியில் அதன் பிறப்பிலிருந்தே மும்முறை வடிகட்டி வந்த தொன்மையும் பழமையும் தனிச் சிறப்பும்

உடையவை.

து

மூன்றாவது கூற்றினையே நாம், தெய்விகமாய் வந்தமைந்த கூறு என்னலாம். ஏனெனில், எல்லாத் தனித் தன்மைகளும் பழமைகளும் நல்லனவாய், கால இ டங்கடந்த உலக நலன் அதாவது வள்ளுவ நலன் உடையவையாய் இருந்து தீர வேண்டும் என்பது கிடையாது. ஆனால் கொங்குப் பழமையும் கொங்குத் தனித் தன்மையும், கடல் கொண்ட குமரித் தமிழக மரபில் தோய்ந்தவை. அவை வருங்காலக் கொங்குத் தமிழகத்துக்கும், தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும், நாகரிக உலகுக்கும் அகல் உலகுக்கும்கூட நீடு நலம் தருபவை - நீடு நலம் மட்டுமன்றி, அவற்றின் வாழ்வுக்கு, வளர்ச்சிக்கு இன்றியமையா உயிர் வளம் தருபவை ஆகும்.

நாட்டுக்கு

கொங்கு வெளியிலிருந்து தமிழரும், தமிழினத்தவரும், இந்தியரும் நாகரிக உலக மக்களும் பேரளவாக வந்து கலந்துகொள்ளும், இன்னும் கலந்துகொள்ளவிருக்கும் நம் காலங்களில் கூட, அக் கலப்பு கொங்கு மக்களின் கொங்கு மரபை- கொங்கு மக்கள் சமுதாய அமைப்பு, பண்பு பண்பாடு ஆகியவற்றை நிலையாக மாற்றிவிட முடியவில்லை. ஏனெனில், அதன் ஆற்றல் பழமையாற்றல், தனித்தன்மை ஆற்றல் மட்டுமன்று. அது புதுமை ஆற்றலாகவும் உயிர்த் துடிப்பும் உயிர் மலர்ச்சிப் பண்பும் உடைய ஆற்றலாகவுமே இயங்குகிறது. அது புது வரவினர் பண்பை ஏற்றுத் தான் மாறுவதுடன் நில்லாமல், அவர்களையும் தன் இனமாக்கி இயைவிப்பது; தன் ஒப்பற்ற