பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
138 ||

அப்பாத்துரையம் - 14



) |-


எல்லாப் பதவியினருக்கும் உரிய இன்றியமையா அடிப்படைத் தகுதியும் அதுவே!

இன்றும் உலகமொழிகளிலே தமிழிலே கூட, 'கொங்கர்' என்ற சொல் ஒன்றுக்கு மட்டுமேயுள்ள குடியரசு மரபுப் பண்பு, கூர்ந்து கண்டு வியந்து பாராட்டி மகிழ்தற்குரிய ஒன்றாகும். உலகின் வேறு எந்த மக்கட்சுட்டு வழக்கும், ஒரு நாட்டுக் குடிமக்கள் பெயராகவும் அந்நாட்டின் ஆட்சியுரிமை பெற்றவர்கள் பெயராகவும் இயங்கவில்லை, இயங்கியதில்லை! கொங்கன், கொங்கர் என்ற சொல் ஒன்று மட்டுமே கொங்கு நாட்டான், கொங்கு நாடாள்பவன் என்ற இரு குடியரசு மரபுப் பொருளும் ஒருங்கே தருகின்றன. சேரன், சோழன், பாண்டியன், தமிழன், இந்தியன், ஆங்கிலேயன் போன்ற எந்தச் சொற்களும் இம் மரபுச் சிறப்புடையனவையாய் இயங்கவில்லை என்பது தெளிவு.

கொங்கு நாட்டுச் சாதி மரபினர் பலரும் தம் வினைதீர்க்கும் தாயத்து ஆகச் சாதிப் பெயருடன் கொங்கு என்னும் புனிதச் சொல்லை (தமிழ்: புனிது-பிறப்பிலிருந்தே தொடரும் தூய்மை) தொங்க விட்டுக் கொள்ள முனைவதில் வியப்பில்லை!

கொங்கு நாட்டவரிடம் காணப்படும் தமிழ் மரபிலூன்றிய இந்த ஆழ்ந்த குடியரசுப் பண்பு பண்டும் அணிமைக் காலத்திலும் முடியரசர்,முடியரசின் மூன்றாம் தள ஊழிக்கால அறிஞர் ஆகியோருக்குக் கண்ணுறுத்தலாயிருந்து வந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், தற்கால ஆராய்ச்சி யாளர்களின் ஆராய்ச்சிகளுக்கே அடிப்படை யாயுள்ள பழைய வரலாற்றுக் கையேடுகள், முடியரசரின் பட்டயங்கள், கல்வெட் டுகள், சாதி மரபினர்க்குரிய மரபு வரலாறுகள் ஆகியவற்றையே தன் வயப்படுத்திவிடத்தக்க கால வண்ணக் கலவையாக அது செயலாற்றி யுள்ளது.

கால வண்ணத்தாலும் கால மயக்கத்தாலும் இடைக்கால அணிமைக் கால ஊழிகளில் போர் வீரர் என்ற பொருளுடைய மறவர் (மறம்: அறத்துக்கு மாறானது). அரசர் வேவுப் படையினரான கள்வர் (திருடர், கொள்ளைக்காரர்), குடியுரிமை குறித்த குடிமகன் (அம்பட்டன்), பொது மகன் (வேசி மகன்), பண்டைக் கோயிற் குருமாரைக் குறிக்கும் தேவராளன்