பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 139

(தேவடியாள்-விலைமகள்), கணியான் (வானூலார், சமயகுரு- பெண்பால்: கணிகை-வேசி), திரை மரபினரான திராவிடர் (ஓடி வந்தவர்), வேள் மரபினரான வேளாளர் (புது வடிவம்; வள்ளாளர்-பெண்பால்: வெள்ளாட்டி-வேசி)

ஆகிய

சொற்களைப் போலவே கொங்குத் தங்க மரபில் வந்த 'கொங்கன்' என்ற (முருகனின்) தெய்வ மரபு பெயருக்குரிய சொல்லும் பண்பற்றவன், வேலையாள் போன்ற இழிபொருள்களுடைய தாகக் கருதப்பட்டு வந்துள்ளது.

சங்க காலப் பலகணி ஒன்று மட்டுமே, இவ்வகையில் தற்காலக்கொங்கு நாட்டுவரலாற்றாசிரியர் கண்களை மட்டுமன்றி, மரபு வரலாற்றாசிரியர்களின் கண்ணோட்டத்தையும் வரலாற்று வாய்மைகளின் மெய் வண்ணம் நோக்கிக் கொண்டு செல்ல உதவுவதாக அமைந்துள்ளது. இது வரும் பிரிவில் விளக்கப்பட விருக்கிறது.

3) கொங்கு நாகரிக வளர்ச்சி: வேளாளர்-வேட்டுவர் மரபு மலர்ச்சி

தமிழ் என்ற சொல்லின் பண்பு விரிவே, பண்பு முனைப்பே கொங்கு என்பது. அது போலவே தமிழ், கொங்கு என்ற சொற்களின் மலர்ச்சி விரிவு, மலர்ச்சி முனைப்பே வேளாண்மை என்ற சொல் - அது கோமரபு, வேள் மரபு ஆகியவற்றின் மலர்ச்சி சுட்டிய சொல் ஆகும். இது போலவே, பழ கொங்கம் என்ற கொங்கு நாட்டின் சிறப்புப் பெயரிலும் அந் நாட்டின் ஒரு பகுதியான மழநாடு என்ற பெயரிலும் இடம் பெற்ற மழ என்ற உரிச்சொல்வீரம், அழகு, இனிமை, இளமை என்றென்றும் நின்று நிலவிச் சாவா மூவா மலர்ச்சி வளம் வழங்கும் பண்பு என்ற அம் மரபின் முழுப் பொருள் வளமும் சுட்டுகிறது. வேள் (முருகன், மன்மதன்) என்ற தெய்வப் பெயரிலும் முருகன், கந்தன் (முருகு- அழகு, இளமை, தேன்; கந்தம்-மணம்; கந்தழி-இலிங்கம்) என்ற தெய்வப் பெயர்களிலும் நாம் இதே கோமரபில் வந்த இதே மரபுப் பொருள் மலர்ச்சிகளைக் காணலாம்.

தமிழ், கொங்கு, வேள், முருகு, கந்தம், மழ என்ற இந்த ஆறு சொற்களும் இவ்வாறு (முருகவேளின் ஆறு முகங்கள் எனும்படி) கோமரபில் வந்த தமிழ் மரபு, கொங்கு மரபு, முருகன் மரபு, மழவர்