பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
140 ||

அப்பாத்துரையம் - 14



மரபு, வேளாண்மை-வேட்டுவ மரபு ஆகியவற்றின் ஒருமை நிறைவைக் குறித்துக் காட்டுகின்றன. (மழவர் என்ற சொல் வேளாளர் மரபையும் வேட்டுவ மரபையும் ஒரே இ ணை மரபாகக்

குறிக்கும் சொல் ஆகும்).

கொங்குநாட்டின் எல்லா மரபினரும், சிறப்பாக அதன் குடியரசு மரபு வழிவந்த ஆட்சியுரிமையுடைய வேளாள- வேட்டுவர் மரபினரும் நாகரிக உலகளாவிய இந்த மலர்ச்சியின் முழுநிறை பண்புக்கு உரியவராவர். பண்டைய வரலாறும் ன்றைய வாழ்வும் ஒருங்கே தெரிவிக்கும் பண்பு மரபின் மெய்ம்மை இது!

இந்தியாவுக்கு வெளியேயுள்ள வேள்மரபின் நாகரிக உலகப் பழமையையும் விரிவையும், மேலே காட்டியுள்ள உலகளாவிய நகர்-நாடு அரசு மலர்ச்சியும் அன்னை வழிபாடும் தெளிவுபடுத்துகின்றன. அது போலவே அன்னையின் சேய் ஆகிய வேள் வழிப்பாட்டின் மிகு பழமை விரிவுக்கு மேலையாசியா வெங்கும் பரவி வந்ததாக விவிலியப் பழைய ஏற்பாட்டுப் பகுதி (கி.மு.7ஆம் நூற்றாண்டு) சுட்டும் வேளின் தங்கக் காளை வடிவ (Bel, Belial) வழிபாட்டு மரபு சான்று பகரும். வேளாளர்-வேட்டுவர் மரபுக்குப்பொதுவாகவும், வேட்டுவ மரபினருக்குச் சிறப்பாகவும் உரிய வடுகநாதர் அல்லது ஐயனார் (அய்யப்பன் அல்லது நகர்- காவல் தெய்வமான சாத்தா) என்ற தெய்வமரபின் பழமையைக் குமரிக் கண்டப் பகுதியாகக் கருதப்படும் வட அமெரிக்கக் கலிபோர்னியா மாநிலத்துச் சாத்தா மலை மரபு (Mount Shasta) சுட்டிக்காட்டும்.

இந்தியாவினுள்ளேயே, இன்றைய தமிழக எல்லைக்கு வெளியேயுள்ள வேள் மரபினர் (தென்னகத்தின் நாயர், நாயகர், நாயுடு, ரெட்டி; மராத்தியர்; இரசபுத்திரர்; கூர்க்கர்; சீக்கியர் முதலியோர்) பெரிதும் வரலாற்றுக் கால முழுமையும் வேளாண்மை மலர்ச்சியின் முற்பாதிக் கூறாகிய வீரமரபு பேணிய அளவில் அம் மலர்ச்சியின் பிற்பாதிக் கூறுகளாகிய பேருழ வாண்மை, பெரு வாணிகம், பெருந் தொழிலாண்மை முதலியவற்றை முதனிலையாக அதாவது மரபு மலர்ச்சிப் பண்பாகப் பண்டே படைத்து உருவாக்கிப் பேணினர் என்று கூற முடியாது.ஏனெனில், வேள் என்ற சொல்லே பரவியுள்ள தமிழின