பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
144 ||

அப்பாத்துரையம் - 14



-


||- வரலாறுகள் சோழ நாட்டிலிருந்து கொங்கு வேளாளர் வெளியேறி வந்த காலத்தைப் பட்டயச் சான்றுடனேயே கலி 807 (கி.மு. 2293) என்றும், கொங்கு வேளாளப் பெரியன் கூட்டத்தலைவரான வேணாவுடையார் அல்லது வேணாடர் சோழ நாட்டிலே (உண்மையில் சோழ நாட்டு எல்லையிலுள்ள கொங்கு நாட்டுப் பகுதியாகிய குழித்துறை வட்டாரத்திலே) தங்கி வாழ்ந்த காலத்தை கலி 1200 (கி.மு. 1900) என்றும் குறிக்கின்றன. கி.பி. 250) என்று இது இன்று நாம் சங்ககாலம் (கி.மு. 600 மதிப்பிடும் காலத்துக்கு 2000 அல்லது 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் ஆகும். அது மட்டுமன்று; ஆரியர் இந்தியாவிற்குள் வந்த காலம் (கி.மு.1500) என வரலாற்றாசிரியர் மதிப்பிடும் கால எல்லைக்கும் இது 700 அல்லது 400 ஆண்டு முற்பட்டது ஆகிவிடுகிறது. பட்டயங்கள் தரும் கலி ஆண்டுகளைச் சக ஆண்டுகள் (கலி 3178 அல்லது கி.பி. 78-ல் தொடங்குவது) எனக் கொண்டே வரலாற்றாராய்ச்சியாளர் தம் முடிவுடன் இந்த ஆதாரங்களை இணைக்கின்றனர். இந்த ஆண்டு மாறாட்டங்கள் மெய்யானால், அதுவே ஆதாரங்களின் கால வண்ண மயக்கத்தையும் காட்டுவது ஆகும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால், அவற்றின் கால வண்ணத்திரிபு காலமாறாட்டத்துடன் அமைவதன்று; பெயர் மாறாட்டம், மொழிமரபு மாறாட்டம், பண்பு மரபு மாறாட்டம் ஆகியவை இவற்றிலும் பிற நாட்டு மரபு வரலாறுகளிலும் மலிந்தே உள்ளன. இதனைப் புலவர் குழந்தை போன்ற வரலாற்றாசிரியர் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதே மரபு வரலாறுகள், சங்க காலப் பசும்பூண் பாண்டியன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் (கி.பி. 1, 2ஆம் நூற்றாண்டுகள்), சங்க காலத்துக்குப் பிற்பட்ட பாண்டிய பல்லவர்கள் (கி.பி. 8, 9ஆம் நூற்றாண்டுகள்) ஆகியோரே வேளாளர் ஆட்சி மரபுக்குப் போட்டியாக வேட்டுவ ஆட்சி மரபினரைப் பாண்டி நாட்டி லிருந்தும், கொல்லி மலைக்கு அப்பாலுள்ள வடுக நாட்டிலிருந்தும் கொங்கு நாட்டுக்குள் கொண்டு வந்து குடியேற்றியதாகக் கூறுகின்றனர்.