பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 147

சங்கப்பாடல்களிலேயே சேரர் கடற்கரைத் தலைநகரான வஞ்சி என்ற கருவூருக்கும், கொங்குநாட்டின் பண்டைய உள்நாட்டுத் தலைநகரான கரூவூர் என்ற வஞ்சிக்கும் ஒரே பெயர்களிட்டு வழங்கி வந்த நிலை இவ் வராய்ச்சித்துறைக் குழப்பங்களை மேலும் மேலும் பெருக்கிற்று.

ம்

இம் மரபு மயக்கம், ஆராய்ச்சிக்குழப்பம் ஆகியவற் றிடையே, ஓயாது கொங்கு, கொங்கர் என்றே பாடிய சங்ககாலப் பதிற்றுப்பத்துக்கும் கொங்கு நாட்டுக்கும் உள்ள தொடர்புகள் அறியப்படாமல், அது சேர நாட்டுக்கு மட்டுமேயுரிய காப்பியம் என்று கருதப்பட்டது. ஆனால் தமிழக வரலாற்றுப் பேரறிஞர் மயிலை சீனிவேங்கடசாமி இக் குழப்ப மயக்கங்க ளகற்றி, அக் காப்பியத்தின் இறந்துபட்ட முதற்பத்து உள்ளடங்கலாக முற்பட்ட ஆறு பத்துகள் மட்டுமே சேர நாடாண்ட பெருஞ் சேரரைப் பாடின என்றும், இறந்துபட்ட கடைசி பத்து உள்ளடங்கலான இறுதி நான்கு பத்துகளும் முப்பெருங் கொங்கு நாடும் வென்றாண்ட கொங்குப் பெருஞ்சேரரைப் பாடியவை என்றும் தெளிவு படுத்தினார். இதன் மூலமே அவர் முதன்முதலாகச் சங்ககாலக் கொங்கு வரலாறு கண்டு, அதனை ஒரு தனி வரலாற்றாராய்ச்சி ஏடாக இயற்றித் தந்துள்ளார்.

கொங்கு நாட்டுப் பழமை பற்றிய இச் சங்க இலக்கியப் புத்தாராய்ச்சி ஒளிகள் கொங்குநாட்டு வரலாற்றின்மீது மட்டுமின்றி, கொங்கு நாட்டு, மரபு வரலாறுகள் மீதும் கொங்கு நாட்டு மக்கள் வாழ்க்கைப்பண்பு மரபுகள் மீதும் பெருவிளக்கம் வழங்குபவையாக உள்ளன!

தற்காலக் கொங்கு நாட்டெல்லையிலே கொங்குச் சோழர் ஆட்சித் தொடக்கத்தில் தென் கொங்கு என்று இன்று கூறப்படும் சேர பாண்டிய சோழ எல்லைகளே நாடும் நகரும் உழவாண்மை, தொழிலாண்மை, பண்பாண்மை வளமும் உடையனவாயிருந்தன. இன்று வட கொங்கு என்று கூறப்படும் பண்டை வடகொங்கு மேல்கொங்குப் பரப்பினை அடுத்த பகுதிகள் முழுவதும் (கோவை, பெரியார், சேலம், தருமபுரி மாவட்டங் களின் பெரும் பகுதிகளும்) நிலவகை, வாழ்வுவகை ஆகிய இரு துறைகளிலும் பெரிதும் வற்றற்பாலைகளாக விளங்கின. ஆனால், தற்காலக் கொங்கு நாட்டின் பெருந்தலைநகர்களான கோவை, சேலம்,