பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
148 ||

அப்பாத்துரையம் - 14



ஈரோடு ஆகியவற்றை உட்கொண்ட இப் பகுதிகள்தாம் இன்று கொங்கு வாழ்வுக்குரிய அக நாட்டின் அகநாடு என்று கூறத்தக்க வளமுடையவை என்பதில் ஐயமில்லை. சங்ககால நிலையும் இதில் வேறுபட்டதன்று. ஏனெனில், பிற்காலத்தில் கொங்குப் பெருவழி என்று கூறப்பட்ட சங்ககால நாகரிக உலக வாணிகப் பெருவழி முழுவதும் இப் பகுதிகளினூடாகவே சென்றது. இப் பகுதிகளின் கூலவளம் (அரிசி வளம். கரும்பு வளம் உட்பட), பொன்மணி வளம், பிற சரக்குவளம் ஆகியவற்றின் பயனாகவே பண்டைத் தங்க நாணயப் புதையல்கள் கொங்கு நாடெங்கும் பேரளவாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. (அரிசியும், கரும்புத் தொழிலும் இரும்பு பொன் சுரங்கத் தொழிலும் ஒருவேளை நெசவுத் தொழிலும்கூடப் படைத்துருவாக்கி உலகுக்களித்த கொங்கு முன்னோர்கள் வாழ்ந்த பகுதிகளே இவைதாம். இது மேலே சுட்டப்பட்டது.) சேரப் பேரரசருக்கு ஒரு சிறிதும் பின்னடை யாமல் கொங்குப் பெருஞ்சேரர் புலவர்களுக்கு வழங்கிய நூற்றாயிரக் கணக்கான காணங்கள் (பொன் நாணயங்கள்) கொங்கு அக நாட்டின் வடபகுதிக்கே சிறப்பான இச் சங்ககால வளத்தினை வலியுறுத்துகிறது. சோழ பாண்டிய பல்லவரும் கங்கரும் அவாவுற்று மீண்டும் மீண்டும் படையெடுத்தழித்த பகுதிகளும் இவையேயாகும்.

கொங்குநாட்டின் சங்ககால, க்கால நிலவள், உழவாண்மை வள, பண்பு வள நிலைகளுக்கிடையே சங்க காலத்துக்கும், சோழர் காலத்துக்கும் இடைப்பட்ட ஊழியில் ஏற்பட்ட பெரும் பள்ளத்தை இந் நிலை சுட்டிக் காட்டுகிறது. இப் பள்ளம் கொங்கு நாட்டின் வட எல்லையையே பெரிதும் தாக்கிற்று. சேர, பாண்டிய, சோழ எல்லைப் பகுதிகளை அவ்வளவாகப் பாதிக்கவில்லை என்றும் தெரியவருகிறது. இவ்விடைக்காலத்தில் தான் களப்பிரர் எழுச்சி என்ற, இந்தியாவின் வடமேற்குக் கணவாய் வழியான அலைபாய்வு களின் கடைசிவீச்சு தமிழகத்தைத் தாக்கி மூவரசுகளையும் புதிய பல்லவ மரபையும்கூடச் சில பல நூற்றாண்டுகளாக அலைக்கழித்தது. கொங்கு நாடே அதன் பேரழிவுக்கு மிகுதியும் ஆட்பட்டிருத்தல் வேண்டும் என்பதில் ஐயமில்லை. பண்டை வட கொங்கு நாடாண்டு இன்றைய கொங்கு நாட்டையும் சங்க காலத்தின்பின் வென்று ஆட்சி செய்த