பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 151

நாட்டு, சிறப்பான நாஞ்சில் நாட்டு வேளாள மரபினரையும் பிறரையும் உள்ளிட்ட வேளாளரினம் முழுமைக்குமே கொங்கு வேளாளர் எவ்வாறு தலைவராவார் என்பதும் விளக்கப்பட வில்லை.

இந் நிலையிலும், குடியரசு மரபில் வந்த மூத்த குடிமகன், 'வேணாடர்' ஆகிய வேளாள மரபுச் சொற்களே வரலாற்று மரபுகளுட்சென்று இம் முடிவுக்கான விளக்கம் காண வழி வகுக்கின்றன! ஏனெனில், ‘மூத்த குடிமகன்' என்ற அறிஞரின் சொற்றொடர் வேள் (Duke, குடியரசுத் தலைவர், கோமகன்; Prince, முதற் குடிமகன்,கோமகன், இளவரசன்) என்ற சொல்லின் மலர்ச்சி மரபு காட்டுகின்றது. வேணாடர் என்ற தலைவரின் பதவிப் பெயரோ அவ் வேள் மரபை மட்டுமன்றி அதன் மலர்ச்சியில் ஒரு திருப்பமாயமையும் வேள் நாடு (Federal Republic) என்ற அமைப்பையும் குறித்துக் காட்டுகிறது. வேள் மரபு வேளாண் மரபாக மலர்ச்சியுற்றதற்குரிய மலர்ச்சித் திருப்பத்தையும், வேளாளர் இனத்துக்குரிய தாய் மூல மரபையும் ஒருங்கே குறிக்கும் சொல் இது! இது தமிழக வரலாற்றுச் சொல் மட்டும் அன்று - தமிழக, தென்னக, இந்திய வரலாற்றுச் சொல் ஆகும்.

கோவரசு மலர்ச்சி, குடியரசு மலர்ச்சி, அரசு மலர்ச்சி ஆகிய ஒரே தொடர்பான மலர்ச்சிக் கோவையில், வேள் நாடு என்னும் தொகைச் சொல்லும் மரபும் மரபுப் பொருளும் நடுநாயக இடம் வகிப்பதாகும். ஏனெனில், ஆதிகால முடியரசு (சேர, சோழ, பாண்டியர், மகத அரசர்) முதலில் வேணாடர் (President of a Republican Federation) பதவி வகித்தே முடியரசுப் பதவி பெற்றனர். குறும்பர், ஆந்திரர், கலிங்கர் ஆகியோரும், புத்தர்பிரான் மரபினரான சாக்கியரும் கொண்டவீடு ரெட்டி அரசரும் தேவகிரி யாதவ மரபினரும் பிறரும் வேணாடராயிருந்தே அரசர் பேரரசராகத் தம்மை வளர்த்துக் கொண்டிருந்தனர். மதுரைத் தமிழ்ச் சங்கம், காஞ்சி, வல்லபி, நாலந்தாப் பல்கலைக்கழகங்கள் ஆகியவையும் காஞ்சி, வைசாலி, காசி போன்ற தன்னாண்மை நகரங்கள் (City Corporations), சோழர் கால உலக வாணிகக் குழுக்கள், தொழிற் குழுக்கள் (Commercial or Industrial Corporations) ஆகியவையும் வேணாடு என்ற அமைப்பிலிருந்து எழுந்த கிளை மலர்ச்சிகளே. இதுபோல மேலே கட்டியர் மரபு,