பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
152 ||

அப்பாத்துரையம் - 14



() || -


செங்குந்தர் மரபு, நாட்டுக்கோட்டை வணிகர் மரபு, பிராமணர் மரபு உட்பட்ட பிற சாதி மரபுகள் ஆகியவற்றின் செய்திகள் மூலம் குறித்துக் காட்டியுள்ளபடி, அவற்றுக்கெல்லாம் முற்பட்ட மூலமான வேளாண்மை மலர்ச்சியின் பிற்பாதிக்கூறாகிய பேருழவாண்மை, பெருந் தொழிலாண்மை, பேரறிவாமை, அருந் திறலாண்மை ஆகிய மலர்ச்சிகளும் 'வேள் நாடு' என்ற மைய மூல மரபு வழி மலர்ந்த நேர் மலர்ச்சிகளில் வரலாற்றுத் தலைமை சான்ற ஒன்றேயாகும்.

இந்த மைய நேர் மரபு மலர்ச்சிக்குரிய நாகரிக உலக, இந்திய, தமிழகப் பகுதி கொங்குத் தமிழகமே என்பது கீழே விளக்கப் படுகிறது..

இன்றைய தமிழகத்தையும் சங்க காலப் பெருந் தமிழகத்தையும்விடத் தொல் பழமையும் தொன்மை விரிவகலமும் உடையது கடலால் பெரும்பகுதி விழுங்கப்பட்ட பண்டை மாபெருங் குமரித் தமிழகம். அதன் மைய மலையாகிய குமரி மலையின் (பண்டைப் பொதியம், பண்டை மலையம் அல்லது பண்டைத் திருமலை) ஒரு தற்காலத் தமிழகக் கிளையே குமரி முதல் குடகு வரை நீண்டு கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் பகுதி (சையமலை). இம் மையத் தமிழ்த் தெய்வமாமலையைச் சுற்றியே தமிழர் வாழ்வும், தமிழ் வாழ்வும், வேளாண்மை மலர்ச்சியும் படர்ந்து வந்துள்ளன. சங்க காலத்தில் இதன் வடகோடியில் (தார்வார், ஐதராபாத் பகுதியில்) ஒன்றும், தென்கோடியில் (நாஞ்சில் நாட்டில்) ஒன்றும், நடுவில் (கோயமுத்தூர் மாவட்டம். அதனை ஒட்டிய மைசூர், குடகு மேல் கடற்கரைப் பகுதி ஆகியவற்றில்) ஒன்றுமாக மூன்று வேள் நாடுகள் உருவாகியிருந்தன. இவற்றுள் நடுவாக அமைந்த வேள் நாடு சங்க காலத்தை அடுத்து அதன் பின்னும் நீண்ட காலமாக வேள் நாடு என்று மட்டுமன்றி வேளாளநாடு என்றும் தனிச் சிறப்புப்பட அழைக்கப்பட்டு வந்தது என்று அறிகிறோம்.

மரபு வரலாறு வேளாளரினத் தலைவராகக் குறித்துக் காட்டும் வேணாடர், மாண்ட தொல் பழமை சான்ற இந்த வேணாடுகளின் மரபில் வந்து இன்றும் மாளா மரபாய், உயிர் மரபாய் நிலவுகின்ற வேள் நாட்டுத் தலைமை மரபினர் ஆவர். அவர் மூலம் நாம் இம் மாண்ட மும் மரபுகளுக்கும் அப்பால்