பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 153

நாலாவதாக, அல்லது நாலாவதும் ஐந்தாவதும் ஆக, மேலும் இரு வரலாற்று வேணாட்டு மரபுகளைக் காண்கிறோம். ஏனெனில், மரபு வரலாறும் வரலாறும் ஒருங்கே சுட்டுகிறபடி, கொங்கு நாட்டின் சோழ நாட்டெல்லையிலுள்ள குழித்தலை வட்டாரத்தில் ஒன்றும் கொங்கு நாட்டின் பாண்டிய சேர நாட்டெல்லை யிலுள்ள பழனி வட்டாரத்தி லொன்றுமாக கொங்கு நாட்டுத் தென் பகுதியிலும் இரு வேணாடுகள் நிலவியதாக அறிகிறோம். கொங்கு நாட்டுத் தென்பகுதியி லுள்ள இரு வேணாடுகளுக்கும் வேளாளரினத் தலைவரான தென்தலை வேணாடரே தலைவராவார்-மரபு வரலாறுகள் ஒன்றை அவரது பழைய தாயக மரபு என்றும் மற்றொன்றைப் புதிய மரபு என்றும் குறிக்கின்றன.

பழனிப் பகுதிக்குரிய வேணாடே திருநெல்வேலி மாவட்ட அம்பா சமுத்திரம் (பண்டை ஆய்க்குடி), திருக்குறுங்குடி, களக்காடு, கோட்டாறு, திருவதங்கோடு, பத்மநாபபுரம், திருவனந்தபுரம் எனத் தலைநகர் மாற்றம் பெற்று, 18ஆம் நூற்றாண்டுக்குள் நாஞ்சில் நாடாகவும் திருவாங்கூர் நாடாகவும் மலர்ச்சி மாறுபாடுகள் பெற்றது. இவ்வாறு நாஞ்சில் நாடு என்று இன்று வழங்கும் பாண்டி நாட்டுப் பகுதியும், இன்றும் மருமக்கள் தாயத்தடம் மாறாது நிலவும் அதன் பழமை சான்ற வேளாண் மரபும் தென் கொங்குப் பழனி வட்டத்தினின்று புடைபெயர்ந்து சென்ற கிளை மலர்ச்சியே யாகும் என்பதை இது காட்டுகிறது.

குமரி மலைத் தொடர்ச்சியாகிய சையமலை சூழ்ந்த இந்த ஐந்து வேளிர் நாடுகளில் கொங்கு நாடே மூன்று வேளிர் நாடுகளை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது என்பதையும், அவற்றுள்ளும் வடபாலுள்ள பண்டைத் தமிழகத்தின் மைய வேள் நாடே (கோவைப் பகுதிகள்) முழு மலர்ச்சிப் பகுதியாக வேளாளர் நாடு எனச் சிறப்பிக்கப்பட்டிருந்தது என்பதையும், கொங்கு நாட்டின் ஏனைய இரு வேள் நாடுகளுக்கும் அதுவே முற்பட்ட பழமையும்,பெருமையும் புகழும் உடையதென்பதையும் காண்கிறோம். மூன்றும் ஒரே வேள் நாட்டின் வரலாற்றுக்காலப் புடைபெயர்ச்சிகளே யாகும் என்பது தெளிவு.

மேற்குறிப்பிட்டுள்ள ஐந்து வேணாடுகளுக்குள்ளே, வடகோடி வேணாடு இன்றைய தமிழக எல்லைக்கு அப்பால் நெடிது வடக்கேயுள்ளது ஆகும். இதனால் இது மேலே