பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
156 ||

அப்பாத்துரையம் - 14



று

து


நாகரிக உலகக் குடியரசு மரபில் முகிழ்த்த வேள்- வேளாண்மை மலர்ச்சி குறிஞ்சியில் பிறந்து முல்லையில் முதிர்ந்து மருதத்தில் தங்கி ஐந்திணையளாவித் திணைவரம் பழித்த பின்பே இன்றைய மனித இன நாகரிகச் சமுதாயமாயிற்று என்பது மேலே கூறப்பட்டது. இது பொது முறையில் உயிர் மண்டிலமாகிய நாகரிக உலகின் ஐந்திணை விரவிய பல பரப்புகளுக்கும் உரியதேயாகும். ஆயினும், அதன் இடையறா முழுநிறை வளர்ச்சிக்கும் முழுநிறை உயிர் மரபுக்கும் வளத்துக்கும் உரிய ஒரே உலகப்பகுதி ஆனைமலை, வெள்ளிமலை, குடகுமலை, மேல்கடல், காவிரியாறு என்ற இந்த மலையாறு கடலளாவிய பகுதியாகிய கொங்கு நாட்டின் வேளாள நாடேயாகும். இதிலிருந்து இரு மலர்ச்சிப் பாதைகள் இம் முழு வேளாண் மலர்ச்சியைத் தமிழகமெங்கும் கொண்டு சென்றன. ஒரு பாதை மலையோரமாகத் தெற்கு நோக்கிச் சென்று பழனி வட்டாரப் பகுதியில் வந்து தங்கி, பின் அங்கிருந்து பாண்டி நாட்டின் நாஞ்சில் நாட்டுப் பகுதி சென்று பாண்டிநாடு முழுவதும் ஓரளவு சேர நாட்டிலும் பரவிற்று. இரண்டாவது பாதை காவிரி நோக்கிச் சென்று, காவிரியின் போக்கிலேயே தென் கிழக்காக முன்னேறிக் குழித்தலை வட்டாரப் பகுதியில் தங்கி, பின் கிழக்காகச் சோழ நாட்டிலும் வடக்காகத் தொண்டை நாட்டிலும் பரவிற்று.

மேற்கண்ட இருபாதைகளுமே கொங்குநாட்டின் நீள அகல முழுதும் கடந்தே சென்றன என்று காணலாம்.

களப்பிரர் எழுச்சிக்கால அலைபாய்வு, தமிழக முழுவதையும் பொதுவாக வடபால் பாதித்த அளவு தென்கோடி யிலுள்ள நாஞ்சில் நாடு, தென்பாண்டிநாடு ஆகியவற்றின் மலர்ச்சியைத் தாக்கிக் குலைக்கவில்லை. ஆனால், கொங்கு நாட்டின் வடபெரும்பகுதி முழுவதும் மலர்ச்சி வளம் முற்றிலும் இழந்து விடவே, வேளாண் மரபினர் சேர பாண்டிய சோழ நாட்டு எல்லைவரை துரத்தி ஒதுக்கப்பட்டனர். கங்கர் ஆட்சியின் இறுதிக் காலத்திலும் சோழர் காலத்திலும் தொடங்கப்பட்ட வேளாண் மறு மலர்ச்சிக்கு இத் தெற்கு, தென் கிழக்குப் பகுதிகளே (சோழ நாட்டெல்லையிலுள்ள கொங்குப் பகுதி யாகிய குழித்தலை வட்டாரம், சேர பாண்டிய நாட்டெல்லை யிலுள்ள கொங்குப் பகுதியாகிய பழனி வட்டாரம் ஆகியவையே)

-