பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
158 ||

அப்பாத்துரையம் - 14



) ||-


இந்தியாவில் விந்தியச் சூழலையும் போலவே கொங்கு நாட்டு மலைப்பகுதிகளிலும் இத்தகைய திணைநிலை ஒதுக்கீட்டு நாகரிகங்கள் வந்து படிவுற்றுள்ளன. கொங்கு அக நாட்டிலும் உள்நாட்டில் மட்டுமே இவ்வாறு பிரியாமல் ஒதுங்காமல் முல்லை, மருதம், நெய்தலாகிய மற்றத் திணை மரபினங்களைப் போலவே குறிஞ்சி மரபில் வந்த பழம்பெரும் கோமரபினராகிய வேட்டுவ மரபினரும், வேளாளருடன் ணை பிரியாத வேளாளராகவே ஐந்திணை மலர்ச்சியாகிய வேளாண்மை மலர்ச்சி முழுதுமே நிறைவுறப் பெற்று, பண்டைக் குடியரசு மரபில் வந்த குடியாட்சி மரபை (கொங்குப் பண்பை) அவர்களுடன் இன்றும் பங்கு கொண்டு வளர்த்து வருகின்றனர்.

மக்களால் விருப்பார்வத்துடன் இராசாசி என அழைக்கப்பட்டு வந்துள்ள கொங்கு நாட்டுப் பெரியார் சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார், தாம் இந்தியத் தலைவராயிருந்தபோது வள்ளுவ அரசியலின் சிறப்பைப் பாராட்டியது போலவே, தாம் தமிழக முதல்வராக அமைந்த காலங்களில் ஐந்திணை மரபும் இணைந்த கொங்கு வேளாளரின் தேசிய உழைப்பாற்றலை வியந்து போற்றியுள்ளார். ஆனால், முடியரசர் பொதுவாக, சிறப்பாகத் தமிழரின் கடல் கடந்த உலகாட்சியில் முனைந்த பாண்டிய பல்லவரும் பிற்காலச் சோழரும் போன்று கோமரபில் வந்த முடியரசர் இந்த வேட்டுவர் மரபு மற்றத் திணை மரபுகளைப் போலக் கொங்கு வேளாள மரபில் தோய்ந்து ஒன்றிவிடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அவ்விரு மரபினரையும் பிரித்தாளும் வினைமுறை மேற் கொண்டனர். இவ் வகையில் பாண்டிய பல்லவர்கள், கொங்குப் பெருஞ் சேரரால் அடக்கி ஒடுக்கப்பட்ட அதியமான்-ஓரி-காரி மரபினரை மீண்டும் உயர்த்தி வேளாளருடன் போட்டி யிட்டு மோதவிட முயன்றனர். (கொங்கு நாட்டின் வடபகுதி முழுவதும் பாலையாக, கொங்கு வாழ்வு வளப்பரப்பில் ஒரு வரலாற்றுப் பள்ளமாக ஆக்கப் பெற்ற குருதிப் போராட்டங்களுடன் இது பெரிதும் தொடர்புடையது ஆதல் கூடும்). ஆனால், சோழ மரபினரோ, தம் புதிய தேசிய வளத்தின் பெயராலேயே இதனை இன்னும் சிறப்புற நடத்தினர். பழைய முடியரசுக்கு மாறாக