பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
160 ||

அப்பாத்துரையம் - 14



தமிழக (பண்டைப் பெருந்தமிழக) எல்லையெங்கும் சிறப்பாகக் கொங்குத் தமிழக (பண்டைப் பெருங்கொங்குத் தமிழக) எல்லையெங்கும் நிலவிவரும் முனைப்பான முருக வழிபாட்டில் நாம் இன்னும் இந்தக் குறிஞ்சி மரபுக் காலத்துக் குரிய கோமரபின் தனிப்பட்ட செல்வாக்கினைக் காணலாம். மேலே சுட்டியுள்ளபடி தமிழ்மொழி மரபு, சொல் மரபு, பண்பு மரபுகளில் கூட நாம் இந்தக் கோ மரபின் ஆணிவேர், பக்கவேர், சல்லிவேர்த்துய்கள் ஆகியவற்றைக் காண்டல் தகும்.

சைவ நாயன்மார்களில் சேர அல்லது கொங்குச் சேர அரசராகிய சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோருடனும், வைணவ ஆழ்வார்களுள் கொங்குச் சேர அரசனாகிய குலசேகராழ்வார், திருமங்கை யாழ்வார் ஆகியோருடனும் கொங்கு வரலாறு பெருந் தொடர்பு காண்டுள்ளது. சுந்தரர் வேடுபறி என்ற அழகிய பாடல் வேட்டுவர் வடிவில் கொங்கு வேளாள நாட்டிலே இறைவனாடிய திருவிளையாடல்களைப் பாடுகிறது. முருகனின் ஒரே காதல் துணைவியான வள்ளி நாச்சியார் (கண்ணனின் பன்மனை மணமும், முருகனின் தெய்வயானை மணமும், சங்ககாலம் அறியாத பிற்கால மரபுகள்) இவ்வேட்டுவ மரபினரேயாவர். பாரதத்தில் விசயனுக்குச் சிவபிரான் அருள் பாலிக்கவந்த வடிவமும் இவ்வடிவமேயாகும்.

வேள் என்ற தமிழ்ச்சொல் முருகனையும் காதற் கடவுளையும், வேள்வி என்ற சொல் வழிபாட்டையும் ஒப்புரவையும் (வேளாண்மை) வேட்டம் என்பது காதலையும் வேட்டையையும், வேடு என்பது இறையுணவு மீதிடும் மெல்லாடையையும் வேடரையும் களவியல் காதலையும், வேட்டு என்ற சொல் மலை தகர்த்துக் காடு நாடாக்க வழிவகுக்கும் சுரங்க வெடியையும் உணர்த்தும். இச் சுரங்க வெடியின் பழமையைக் 'கல்லுளிச்சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடு பொடி' என்ற தமிழ்ப் பழஞ்சொல் காட்டும்.

பண்டை வேளிர்க்கும் அவர் வழிவந்த அரசருக்கும் அவர்கள் உருவிலேயே வழிபடப்பட்ட ஐயனார் அல்லது சாத்தனுக்கும் (சாத்தன், சாத்தா: சமக்கிருதம், சாஸ்தா-அரசன்;