பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 163

அறிஞர் செல்வி சக்தி தேவியார், தம்மையுமறியாது மரபு வழி நின்றே பயன்படுத்திய 'மூத்த குடிமகன்' ‘முதற் குடிமகன்’ 'வேளாளர் னத்துக்கே தலைவர் வேணாடர்' என்ற தொடர்களின் பின்னணியிலுள்ள மரபு விளக்கம் இதுவே!

கொங்குநாடு, கொங்கு வேளாளர் னம் ஆகிய இரண்டனுக்கும் உரிய தனி மரபுத் தன்மை அல்லது கொங்குத் தன்மையை நாம் கீழ்வருமாறு வகுத்துக் காணலாம்.

பண்டைக் கொங்குத் தமிழகப் பரப்பு, பண்டை நாகரிக உலகின் வாணிகப் பெரும் பாதை தன்னூடாக மேற்கு கிழக்காக நேர் குறுக்கே செல்லப்பெற்று அதன் முழுமலர்ச்சி வளத்தையும் பெற்றிருந்தது; ஆனால், அதன் அரும்பெரும் பேறு இது ஒன்று மட்டுமன்று; கிட்டத்தட்ட அதே ஊழியிலேயே, அதுபோலவே நாகரிக உலகின், தமிழகத்தின் வேளாண்மை முழுமலர்ச்சிப் பாதைகள் இரண்டிலும் கொங்குத் தமிழகம் வடக்கு தெற்கு அல்லது வடமேற்கு தென்கிழக்கான போக்கில் சென்ற

ருபெரும் பாதைகளிலும் நேர்குறுக்காகக் கிடந்து அதன் முழு நிறை மலர்ச்சியும் தேசிய பண்பாட்டுவளமும் பெற்று வந்துள்ளது. இது மட்டுமோ? இரு பாதைகளிலும் சங்க ரு காலத்துக்கு முன்னுள்ள (வடக்கு தெற்கு அல்லது மேற்கு கிழக்கான) முதல் மலர்ச்சிச் சீரமைப்பையன்றி, சோழர் காலத்தி லான (தெற்கு வடக்கு அல்லது தென்கிழக்கு வடமேற்கான) இரண்டாம் மலர்ச்சி அல்லது மறு சீரமைப்பையும் அது பெற்றுத் திகழ்ந்துள்ளது. முழு மலர்ச்சியை நிறைவாகவும் இருமடியாகவும் பெற்றதனாலேயே அது தென் அமெரிக்காவின் ‘பெரு' நாட்டு இங்கா மரபுப் பரப்பைப் போல, தமிழக, இந்திய, நாகரிக உலக வேளாண்மை, தொழிலாண்மை மலர்ச்சியின் மையமாகத் திகழ்ந்து வந்துள்ளது. இது போலவே அது நாகரிக உலகின், இந்தியாவின் சமுதாயத் துறைச் சமதரும. தேசிய ஒளி பரப்பும் மைய நிலமாகவும் விளங்கி வருகிறது.

வீரமரபு, கால்நடைப் பயிர்ப்பின மரபு (கற்பு நாகரிக அதாவது குடும்பவழி வந்த குடியரசு நாகரிக மரபு), உழவாண்மை, தொழிலாண்மை, வாணிக மரபுகள் ஆகிய ஐந்திற மரபும், ஓருலகு காணவல்ல மனித இன நாகரிகத்தின், தேசியங்களின் விதைப் பண்பாய்ச் சமுதாய ஒத்திசைவு, கூட்டிணை பண்பு ஒருங்கே