பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
164 ||

அப்பாத்துரையம் - 14



() || -


கொண்டவையாகக் கொங்கு நாடும், கொங்கு வேளாளர்மரபும் ஒருங்கே இலங்குகின்றன.

நாகரிக உலகப் பழங்குடியினத்தவரின் தொல்பழமைச் சின்னமாக விளங்குபவை கோத்திர குலப் பிரிவு, கோத்திரச் சின்னங்கள் (Totems: பெரும்பாலும் செடி கொடிவிலங்குகள் பண்புகளாக அமைபவை), இவற்றை அடிப்படையாகக்கொண்ட ஒத்திசைவு, அகல்விரிவுக்குரிய (குலம், பெருங்குலம், இனம், பேரினம், நாடு, மாநாடு, உலகம் என்று செல்கிற) குடியரசு மலர்ச்சிப் பண்பு ஆகியவையே. இ வை நாகரிக உலகின் வேறு எந்தப் பரப்பையும்விடக் கொங்கு நாட்டுக்கும், வேறு எந்த மரபினரையும், பிற பிராமண வேளாள மரபினரையும் விடப் பேரளவாகக் கொங்கு வேளாளருக்குமே பெருவாய்ப்பாக கிடைத்துள்ளது குறிப்பிடத் தக்கது ஆகும்.

உலகில் வேறு எந்த நாட்டின் எந்த மரபினுக்கும்- இந்தியாவில் வேறு எந்த பிராமண அல்லது வேளாள மரபின னருக்கும் இல்லாத நிலையில் கொங்கு நாட்டு வாழ்வில் கொங்கு வேளாள மரபு நாட்டு வாழ்வே வாழ்வாகக் காண்டியங்குகிறது. அவர்கள் பெரும்பாண்மை வகுப்பாக இன்று விளங்குவது குடியரசு மரபு மலர்ச்சியறாத அவர்களின் ஒத்திசைவு-அகல் விரிவு மலர்ச்சியின் விளைவேயாகும். அதுமட்டுமன்று. இந்தியா வெங்கும் சாதி வருண அடிப்படையில் ஏற்பட்டுள்ள சமுதாய, அரசியல், கல்வி, உழவு, வாணிக தொழிலாட்சிப் பிளவுச் சிதறல்கள், கொங்கு வேளாளர் வாழ்வையோ கொங்கு வாழ்வையோ இன்னும் பாதிக்கவில்லை. அது இன்னும் அகல் தேசிய வாழ்வு ஊக்கும் சமுதாயத் தேசிய வாழ்வாகவே இயல்கின்றது. தொல்காப்பிய கருப் பொருள் மரபை நினைவூட்டும் காணி (தனிநில உரிமை, குடிவழிக் கோயில் மரபு; மேலைச் சொல்: Cult) ஆகியவை ஓரளவு பாண்டி நாட்டிலும் பேரளவில் கொங்கு நாட்டிலும் இன்னும் நீடித்து நிலவுகிறது.

நாகரிக உலகமெங்கும், இந்தியாவிலும், தமிழகத்திலும் பொதுவாகப் புதிய நாகரிகங்கள் பரவாத இடப் பரப்புகளிலும், பழங்குடி, மலங்குடி, தாழ்த்தப்பட்ட இனப் பரப்புகளிலும் சிறப்பாக குடிப்பெயர்கள், இடப்பெயர்கள் (மலை, ஆறு ஆகியவற்றின் பெயர்கள்) சாதி மரபுப் பட்டப்பெயர்கள்