பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
168 ||

அப்பாத்துரையம் - 14



தற்காலக் கொங்கு நாடாகிய பண்டைத் தென்கொங்கு நாட்டில் வையாவி நாடு, தகடூர், கொல்லிமலை, குதிரைமலை, கண்டிர நாடு, விச்சி நாடு, காமூர் நாடு ஆகியவை பற்றியும் ஓரளவு விளக்கமான செய்திகளை அறிகிறோம். கோலத்துக்காகப் பெண்டிர் இடும் புள்ளிகள் போல, இவை சங்க காலக் கொங்கு நாட்டின் வரலாற்றுப் போக்கையும் கொங்கு மக்கள் வாழ்க்கைப் போக்கையும் நுனித்துணர வைப்பவையாய் உள்ளன.

ங்கே குதிரைமலை இரு தடவை கூறப்பட்டுள்ளது காணலாம். பெரும் புலவர் ஒளவை துரைசாமிப்பிள்ளை கருதியுள்ளபடி, அவை ஒரே மலையின் இருபக்க நாடுகளாய் வடகொங்கு தென்கொங்குப் பகுதிகளில் இருந்தவை என்று கருதத் தகும். இரண்டும் ஒரே நாடு என்பவரும் உண்டு.

கொங்கு மக்கள் வாழ்வு அந் நாளைய அனைந்திந்திய அரசியல் வாழ்வு, பெருந் தமிழக முழுவாழ்வு ஆகிய வரலாற்றுச் சக்கரங்களின் சுழற்சியிடையே சுழற்சிமைய அச்சாகத் திகழ்ந்தது. இப்பெருஞ் சுழற்சியின் போக்கை ஒட்டியே நாம் முதலில் மேல்கொங்கு, அடுத்து வடதென் கொங்குப் பரப்பு என அவற்றின் வரலாறுகளை வரிசைப்படுத்திக் காண வேண்டிய வர்கள் ஆகிறோம்.

மேலே சுட்டியுள்ளபடி தொல் பழங்கால இந்தியாவின் ஆதி முடியரசுப் போட்டிகள் பேரரசு போட்டிகளாக விரிவுற்றபோது, அவற்றின் தொலைவீச்சாகத் தென்திசை வடதிசைப் போட்டி கிளர்ந் தெழுந்தது. இதன் அரசியல் வரலாற்றில் மூன்று மரபுகளையும் அவற்றிடைப்பட்ட இரு திருப்பங்களையும்

காணலாம்.

கடல்கொண்ட தென் மதுரையிலிருந்து ஆண்ட முதற் சங்க கால நிலந்தரு திருவிற் பாண்டியன் நாட்களிலிருந்து சோழன் கரிகால்வளவன், இமயவரம்பன் பெருஞ்சேரலாதன், ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் காலம் வரை (கி.பி. 2ஆம் நூற்றாண்டு) நீடித்த முதல் மரபு தென்னக இமயப் படையெடுப்பு விழாவாகவே நடந்தது. ஆனால், இதன் பிற்பகுதியிலேயே முதல் திருப்பம் ஏற்பட்டு, இரண்டாம் மரபு புத்தர் காலப் பேரரசன் அசாதசத்துரு (கி.மு. 5ஆம் நூற்றாண்டு) மோரியர் (கி.மு.4ஆம்