பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
170 ||

அப்பாத்துரையம் - 14



()

'வெண்கோட்டு யானை சோனைபடியும் பொன்மலி பாடலி பெறீஇயர்!’

‘பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர் சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை

நீர் முதல் கரந்த நிதியங் கொல்லோ?:


(குறுந்தொகை 75)

(அகம் 265)

மோரியப் பேரரசனான அசோகன் (கி.மு. 272-231) செதுக்குவித்த பாளிமொழிக் கல்வெட்டுகள் மூலமாக, அவன் பேரரசாட்சி பண்டைப் பெருந்தமிழக எல்லைவரை பரவியிருந்ததாக அறிகிறோம். அவன் பாட்டன் (சந்திரகுப்தன்), தந்தை (பிந்துசாரன்) ஆகியோரின் ஆட்சிகள் விந்தியமலைக்கு இப்பால் பரவியிருந்ததாகத் தெரியவில்லை; அசோகன் ஆட்சியிலோ அவன் முதற்போரும் இறுதிப் போரும் அவன் ஆட்சித் தொடக்கத்தில் நிகழ்ந்த கலிங்கப் பெரும் போரே (கி.மு. 271-264) ஆகும். இந் நிலையில் தென்னக வெற்றி பெரிதும் பிந்துசாரன் ஆட்சி யிறுதிக் குள்ளாக நடத்திருக்கலாம் என்று வின்சென்ட் சுமித் முதலிய வரலாற்றாசிரியர்கள் கருதியுள்ளனர். ஆனால் உண்மை நிலை, தென்னக வரலாற்று மரபு மூலமே, விளங்குவதாகும், கலிங்கப் பேரரசும் ஆந்திரப் பேரரசும் குடியரசுக்குழு நிலையிலிருந்துகொண்டே, வடதிசைப் பேரரசுகளுடன் (பர்மிய அரசுகளுடன்கூட) போட்டியிட்டு அவற்றை இறுதியில் விழுங்கியவை ஆகும். அசோகன் காலத்துக்கு முன்னரும் பின்னரும் இரு பேரரசுகளும் மாறி மாறி விரிவுற்றுத் தமிழக எல்லையளாவியிருந்தன. எனவே தென்னகம் வென்ற மோரியப் பேரரசன் உண்மையில் சந்திர குப்தனோ, பிந்துசாரனோ அல்லன்; அசோகனே! பண்டைத் தமிழக எல்லையளாவிப் பரவியிருந்த கலிங்கப் பேரரசின் வெற்றியுடன் வெற்றியாகவே, அவன் பேரரசும் தமிழக எல்லையளாவி நின்று, அதன்பின் தமிழகத்தினுள்ளும் படையெடுக்க முயன்றது. ஆனால், இதில் வெற்றி கிட்டாததனாலேயே அசோகன் தமிழக அரசுகளுடன் நேச ஒப்பந்தம் செய்துகொண்டான்.

கலிங்கப் போருடன் போராகவே தமிழகப் படையெடுப்பு முயற்சி மோரியரால் திட்டமிட்டுத் தொடங்கப்பட்டு,அப்பெரும் போரின் இறுதிக் கட்டமாகவே அம் முயற்சியும் முடிவுற்றது.