பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
172 ||

அப்பாத்துரையம் - 14



(

||--


இடையே மேல் கொங்கு நாட்டில் அவற்றுடன் போட்டியிட்டு வளர முற்பட்ட கோசர் என்ற வேள்புலக் குடியரசுக் குழுவேயாகும். கோசர் மரபு, அதன் மூர்க்கமிக்க முதல் தாக்குதலுக்கு ஆளான கடம்பர் தலைவனான நன்னனின் வேளரசு ஆகிய இரண்டுமே மேல் கொங்கு நாட்டுக்குரிய வேள் அரசுகள் ஆகும்.

கோசருக்கும் கொங்கு நாடு உட்பட்ட தமிழகத்துக்கும் யேயுள்ள தொடர்பு மேலே சுட்டப்பட்டுள்ளது. வரலாற்றாசிரியர் சிலர் பல்லவரை (பஃலவர் என்ற பார்த்தியருடன் ஒன்றுபடுத்தி) அயலவர் என்று கருதியது போலவே, கோசரையும் (குசாணருடன் தொடர்புபடுத்தி) அயலின மரபினர் என்று கருதியதுண்டு. ஆனால், அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி காட்டியுள்ளபடி, அவர்கள் தாயகம் தமிழ்த்துளு நாடாகிய மேல் கொங்கத்தின் வடகொங்கமளாவிய எல்லையே (குடகுநாடே)யாகும். அத்தாயகத்தில் அவர்கள் வாழ்ந்த வாழ்வையே சங்கப் பாடல் ஒன்று நமக்குப் படம் பிடித்துக்காட்டுகிறது.

‘மெய்ம்மவி பெரும் பூண் செம்மற் கோசர்

கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த

பாகலார் கைப் பறைக் கட் பீலித்

தோகைக் காவின் துளுநாடு'

(அகம் 205)

கிரேக்க நாட்டு நகர்-நாடு அரசுகளில் ஒன்றாகிய ஸ்பார்ட்டா (Sparta)வின் மக்களைப் போலவே, கோசரும் போர் ஒன்றையே வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டு எப்போதும் போர்த்திறப் பயிற்சிகளிலேயே ஈடுபட்டிருந்தவர்கள் ஆவர். அவர்களைக் குறிப்பிடும் போதெல்லாம் சங்கப்புலவர்கள் 'வென்வேல் கோசர்', 'வாய்வாள் கோசர்' 'இளம்பல் கோசர்' என வாளும் வேலும் தாங்கிய அவர்களின் வீரத் தோற்றத்தையும் இளமை அதாவது இளமைத் துடிப்பையும் தன்னாண்மைப் போக்கையுமே நம் கண்முன் கொண்டு வருகின்றனர். தவிர, அசோகன் கல்வெட்டுகள் கூறும் சத்தியபுத்திரர் என்ற பெயரையே நினைவூட்டும் முறையில் சங்கப்புலவர்கள் அவர்களை ‘வாய்மொழிக் கோசர்’, 'ஒருமொழிக் கோசர்' என்றே