பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொங்குத் தமிழக வரலாறு

|| 173

குறிப்பிடுகின்றனர், மேலும் 'நான்மொழிக்கோசர்: 'நாலூர்க் கோசர்' என்றும் அவர்கள் சுட்டப் பெறுகின்றனர்.

தமிழ்-மலையாள மொழிகளில் கொஞ்சு, கொச்சு (மலையாளம்: சிறிய), குஞ்சு (மலையாளம் குஞ்ஞு-குழந்தை), குஞ்சி (ஆண்முடிமயிர்), குஞ்சம் ஆகிய சொற்களுடனும் கொச்சி (நாட்டுப் பெயர்), கொச்சி மஞ்சள் ஆகியவற்றுடனும் கோசர் என்ற இனப்பெயர் தொடர்புடையது. சந்திரகுப்த மோரியன் காலத்துக்கு முன்னரே இவர்கள் இந்தியாவுக்கு வடமேற்கே பரவியிருந்தனர் என்று கருத இடமுண்டு. இந்துகோசு மலை, ஆரிய மாநிலமடுத்த ஆரகோசா மாநிலம் (மோரிய அரசிலும் ன்றைய உருசிய அரசிலும் பகுதிகளாயிருப்பவை) ஆகிய பெயர்களும் அவ்விடங்களிலிருந்து அலைபாய்ந்த குசாண மரபும் இவர்களுடன் பழந்தொடர்பு உடையவர்களாயிருத்தல் கூடாததன்று.

கொங்கு என்ற சொல்லைப் போலவே 'கோசர்' என்ற சொல்லும் இளமை குறித்தல் காணலாம். சில அறிஞர் 'நான்மொழிக் கோசர்' என்பதற்குத் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளும் பேசியவர்கள் என்று பொருள் கொள்ள எண்ணியுள்ளனர். ஆனால், இப் பழங்காலம் மலையாளமோ (வடுகு என்ற மொழியாகவன்றி தனி மொழிகளாகத்) தெலுங்கு கன்னட மொழிகளோ தோன்றாத காலம் ஆகும். உண்மையில் “நான்மொழி” 'நாலூர்' என்ற தொகைகளும், எப்போதும் 'கோசர்' என்றே குறிக்கப்படும் பன்மை வழக்கும், இளமை என்ற (குடியரசு மரபினுக்குரிய தன்னாண்மை குறித்த) அடைமொழியும் அவர்கள் குடியரசுக் கூட்டுக்குழுவாய் அமைந்த நான்கு நகர்-நாடு அரசுகளின் ணையரசு (Confederacy or Confederation) மரபினரே யாவர் என்பது காட்டுகின்றன. சிந்துவெளி நாகரிக காலத்திலிருந்தே (கி.மு. 2500) இத்தகைய நாலூர்க் குடியரசுக்குழு நிலவியிருந்தது என்று திருத்தந்தை ஈராசு கருதியுள்ளனர்.

தொல் பழங்காலத்திலேயே வேகமாக வளர்ந்து வந்த இந்த வீரவல்லரசு, கலிங்கப் பேரரசின் வீழ்ச்சிக்கு முன்பே, கிழக்கும், வடக்கும் அக் குடியாட்சி வல்லரசாலும்; தெற்கே மற்றத் தமிழக அரசுகளாலும்; மேற்கே மற்றொரு கடலக வல்லரசாக வளர்ந்து