பக்கம்:அப்பாத்துரையம் 14.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
174 ||

அப்பாத்துரையம் - 14



() || -


வந்த கடம்ப அரசாலும் நாற்புறமும் அடைபட்டு வளர்ச்சி தடைப்பட்டு முறுகி நின்றது ஆதல் வேண்டும். தொலைப் பேரரசனான அசோகனின் நேசபாசக் கரமேற்று, அவனது கலிங்கத் தாக்குதலுக்கு ஆதரவாகக் கிளர்ந்து இச் சூழுறவு தகர்க்க அவர்கள் எளிதாக முன்வந்ததற்குரிய காரணம் இதுவே!

‘துடியன் கடம்பன் பாணன் பறையன்' என்று சங்க காலப் பாடல்கள் விதந்துரைக்கும் தமிழர் தொல்பழ மரபுகள் நான்கில் ஒன்று கடம்ப மரபு. தமிழர் புராண மரபிலே முருகப்பெருமான் கடம்பர் தலைவனாகிய சூரனை வென்றதனாலேயே கடம்பன் எனப்பட்டான். இலங்கையின் கடம்பனாறு, மதுரையின் பழமைப் பெயரான கடம்பவனம் (கோயில் திருமரம் கடம்பமரமே ) ஆகியவை அவர்களது தென்திசைத் தொல்பழ மரபு காட்டும் பாணர் அல்லது வாணர் (Banas: கேரள மரபிலும் புராண மரபிலும் தென்னக முழுதாண்ட மாவலி அல்லது மகாபலிச் சக்கரவர்த்தியின் மரபினர்) என்பவருடன் போட்டியிட்டும் ஒன்றுபட்டும் அவர்கள் உள்நாட்டுப் பகுதியில் ஒதுங்கி வடகொங்கு, தொண்டை நாட்டுப் பகுதிகளில் அரசமரபுகள் அமைத்து ஆண்டனர். ஆனால், சங்ககால முழுவதும் அவர்கள் மேல் கடற்கரையெங்கும் கடற்கொள்ளைக் காரராகவும் கடல் வல்லரசாகவும் அமைந்து சேரப் பேரரசருக்கும் கிரேக்கரின் உலக வாணிக வழிகளுக்கும் பெருந்தொல்லை தந்து வந்தனர்.

கடம்பரும் வாணரும் பண்டு தமிழகம் எங்கும் பரவி யிருந்தனரோ என்று கருத இடமுண்டு. ஏனெனில், தென் தொண்டை நாட்டுப்பகுதி வரலாற்றுக் காலங்களிலே பாணராட்டிரம் (தற்கால பண்ணுருட்டி நகர் வட்டாரம்) என வழங்கப்பட்டது. மற்றும் கடம்பர் தலைவர்களுக்குரிய நன்னன் என்ற பெயரில் வேள்புலத் தலைவர்கள் சங்க காலத்திலேயே கொங்கு நாட்டு ஆனைமலைப் பகுதியிலும் தொண்டைநாட்டுப் (செங் கண்மா நாட்டுப்) பகுதியிலும் இருந்தனர். மேல் கொங்க நாட்டில் கடம்பர் ஆட்சிக்குரிய பாலி நாட்டிலேயே நாம் சங்ககாலத்தில் நன்னன் என்ற பெயருடைய வேளிர் சிலர் பலரை, முதன்மையாக இருவரை, அறிகிறோம்.